»   »  சூட்டிங் ஸ்பாட்டில் ஆசின் காயம்

சூட்டிங் ஸ்பாட்டில் ஆசின் காயம்

Subscribe to Oneindia Tamil

பிரபுதேவா இயக்ததில் விஜய் நடிக்கும் போக்கிரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஆசின் நடித்து வருகிறார்.இந்தப் படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது

இதனால் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜயும், ஆசினும் குரூப் டான்சர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் பாடல் காட்சி ஏவிஎம்ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இப்பாடலுக்கான நடன அசைவுகளை விஜய்க்கும் ஆசினுக்கும் டைரக்டர்பிரபு தேவா சொல்லிக் கொடுத்தார்.

குதித்து குதித்து ஆடுவது போல காட்சியை அமைத்தார் பிரபு தேவா. இந்த ஸ்டெப்ஸ் மிக வித்தியாசமாகஇருந்ததால் விஜய் ஒன்றிப் போய் ஆடினார். ஆசினுக்கும் ஆர்வம் அதிகமாகியது. இதையடுத்து ரிகர்சல்பார்ப்பதற்காக தனது செருப்பை கழற்றி வைத்து விட்டு ஆடினார்.

அப்போது ஆசின்-விஜய்யின் வெயிட் தாங்காமல் நடன தளத்துக்காக போடப்பட்டிருந்த பலகைகளைஇணைக்கும் அணிகள் திடீரென மேலே வந்தன.

அதை கவனிக்காமல் ஆசின் குதித்து ஆடியபோது ஆசினின் வலது காலில் ஆணி பாய்ந்தது. இதில் வலி தாங்கமுடியாமல், ஆசின் அலறினார். காலில் இருந்து ரத்தம் கொட்டியது, கண்ணீர் விட்டபடி ஆசின் கதறினார்.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் காலில் இருந்தஆணி அகற்றப்பட்டு கட்டு போடப்பட்டது.

இதையடுத்து சூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ஆசின் சேத்தப்பட்டில் உள்ள தனது வீட்டுக்குசென்றுவிட்டார். சில தினங்கள் ஓய்வெடுத்த பின்னரே அவர் படப்பிடிப்புக்கு திரும்புவார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil