twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெருசுகளிடம் பயம் இல்லை- அசின் மூத்த நடிகர், இளைய நடிகர் என்றெல்லாம் நான் பாரபட்சம் பார்ப்பதில்லை. மூத்த நடிகர்களுடன் நடிக்கவுன்நான் தயார்தான், ஆனால் படத்தின் கதை, எனது கேரக்டர் எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்கிறார் அசின்.தமிழ் சினிமாவில் இது இளசுகளின் காலம். ரஜினி, கமல் தவிர மற்ற பெருசு நடிகர்களுடன் நடிக்க இன்றையஹீரோயின்கள் ஆர்வம் காட்டுவதில்லை, மாறாக பீதியடைந்து ஓடி விடுகிறார்கள். திரிஷா முதல் நயனதாரா வரைஇதுதான் கதை.ஏன் இப்படி பெருசுகளைப் பார்த்து ஓடுகிறீர்கள் என்று அசினிடம் கேட்டபோது,அப்படியெல்லாம் கிடையாது. நல்ல கதையாக பார்த்துத்தான் நான் நடிக்கிறேன். என்னைப் பொருத்தவரைஇளைய நடிகர், மூத்த நடிகர் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. பெரிய நடிகர்களுடன் நடிக்கவும் நான்தயார்தான். விக்ரம் கூட நான் நடிக்கவில்லையா? நல்ல கதையாக, எனக்குப் பொருத்தமான கேரக்டராகஇருந்தால் ஓ.கே தான். 14 வயதிலிருந்தே நான் நடிக்க வந்து விட்டேன். ஆரம்பத்தில் விளம்பரங்கள், பின்னர் உள்ளம் கேட்குமே மூலம்தமிழ் சினிமாவில் என்ட்ரி. நான் நடித்த முதல் படம் என்றால் அது மலையாளத்தில் வெளியான நரேந்திரன் மகன். தமிழ் சினிமா எனக்கு ரொம்பப் பிடித்துள்ளது. இங்குள்ள ரசிகர்கள் ரசனையானவர்கள். நன்றாக நடித்தால் மனம்திறந்து பாராட்டுவார்கள், வெளிப்படையானவர்கள். அது எனக்கு ரொமப்ப் பிடித்துள்ளது.மஜா, கஜினி எனக்கு நல்ல பெயரை தேடிக் கொடுத்தன. இப்போது அஜீத்துடன் நடித்துள்ள காட்ஃபாதரும் பெயர்வாங்கித் தரும். நல்ல கேரக்டர் இந்தப் படத்தில்.புதுமுகங்களால் எனக்கு எந்த மிரட்டலும் கிடையாது. அவர்களின் திறமைக்கேற்ப என்னை பட்டை தீட்டிக்கொள்வேன். போட்டிக்கேற்றவாறு நாம் தயாராகி விட்டால் யாராக இருந்தால் என்ன தூள் கிளப்பி விடலாம் என்றுபடு போடு போடுகிறார் அசின்.அசினிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. தனது சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோருக்காக ஒதுக்கிவிடுகிறாராம். நல்ல புள்ள தான்!

    By Staff
    |
    மூத்த நடிகர், இளைய நடிகர் என்றெல்லாம் நான் பாரபட்சம் பார்ப்பதில்லை. மூத்த நடிகர்களுடன் நடிக்கவுன்நான் தயார்தான், ஆனால் படத்தின் கதை, எனது கேரக்டர் எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்கிறார் அசின்.

    தமிழ் சினிமாவில் இது இளசுகளின் காலம். ரஜினி, கமல் தவிர மற்ற பெருசு நடிகர்களுடன் நடிக்க இன்றையஹீரோயின்கள் ஆர்வம் காட்டுவதில்லை, மாறாக பீதியடைந்து ஓடி விடுகிறார்கள். திரிஷா முதல் நயனதாரா வரைஇதுதான் கதை.

    ஏன் இப்படி பெருசுகளைப் பார்த்து ஓடுகிறீர்கள் என்று அசினிடம் கேட்டபோது,

    அப்படியெல்லாம் கிடையாது. நல்ல கதையாக பார்த்துத்தான் நான் நடிக்கிறேன். என்னைப் பொருத்தவரைஇளைய நடிகர், மூத்த நடிகர் என்ற பாரபட்சம் எல்லாம் கிடையாது. பெரிய நடிகர்களுடன் நடிக்கவும் நான்தயார்தான். விக்ரம் கூட நான் நடிக்கவில்லையா? நல்ல கதையாக, எனக்குப் பொருத்தமான கேரக்டராகஇருந்தால் ஓ.கே தான்.

    14 வயதிலிருந்தே நான் நடிக்க வந்து விட்டேன். ஆரம்பத்தில் விளம்பரங்கள், பின்னர் உள்ளம் கேட்குமே மூலம்தமிழ் சினிமாவில் என்ட்ரி. நான் நடித்த முதல் படம் என்றால் அது மலையாளத்தில் வெளியான நரேந்திரன் மகன்.

    தமிழ் சினிமா எனக்கு ரொம்பப் பிடித்துள்ளது. இங்குள்ள ரசிகர்கள் ரசனையானவர்கள். நன்றாக நடித்தால் மனம்திறந்து பாராட்டுவார்கள், வெளிப்படையானவர்கள். அது எனக்கு ரொமப்ப் பிடித்துள்ளது.

    மஜா, கஜினி எனக்கு நல்ல பெயரை தேடிக் கொடுத்தன. இப்போது அஜீத்துடன் நடித்துள்ள காட்ஃபாதரும் பெயர்வாங்கித் தரும். நல்ல கேரக்டர் இந்தப் படத்தில்.

    புதுமுகங்களால் எனக்கு எந்த மிரட்டலும் கிடையாது. அவர்களின் திறமைக்கேற்ப என்னை பட்டை தீட்டிக்கொள்வேன். போட்டிக்கேற்றவாறு நாம் தயாராகி விட்டால் யாராக இருந்தால் என்ன தூள் கிளப்பி விடலாம் என்றுபடு போடு போடுகிறார் அசின்.

    அசினிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. தனது சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோருக்காக ஒதுக்கிவிடுகிறாராம். நல்ல புள்ள தான்!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X