ஆற்றில் விழுந்த ஆசின்! சமீபத்தில் ஆந்திராவில் நடந்த படப்பிடிப்பின்போது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாராம் ஆசின். நல்ல வேளையாக அவரது அச்சன் ஆற்றில் பாய்ந்துமகளைக் காப்பாற்றி கரை சேர்த்தாராம்.தமிழுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கில் படு பிரபலமாக இருந்தவர் ஆசின்.இப்போது தமிழில் லீடிங்கில் இருந்தாலும் கூட தெலுங்கிலும் அவ்வப்போதுதலையைக் காட்டி வருகிறார் ஆசின்.சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றின் ஷூட்டிங் ஆற்றங்கரையோரமாக நடந்தது.படப்பிடிப்பின்போது ஆற்றில் இறங்கிய ஆசின் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கிவிட்டாராம் அசின்.இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த யாருக்கும் நீச்சல்தெரியாது என்பதால் எல்லோரும் தவித்துள்ளனர். அங்கிருந்த ஆசினின் தந்தை தான்டபால் என ஆற்றில் குதித்து நீந்தி, ஆற்றோடு போன ஆசினை காப்பாற்றி கரைக்குக்கொண்டு வந்தாராம்.ஆசினின் அப்பா முன்பு சிபிஐயில் வேலை பார்த்தவர். நீச்சல் உள்ளிட்ட பல ஸ்கில்ஸ்கொண்டவர். நல்ல வேளையாக அவர் ஷூட்டிங்குக்கு வந்திருந்ததால் ஆசினைக்காப்பாற்ற முடிந்ததாம்.இந்த சம்பவம் குறித்து ஆசின் கூறுகையில், அய்யோ, அது மறு பிறவி. எனது தந்தைஇருந்ததால் உயிர் பிழைத்தேன் என்கிறார்.ஆசினை ஆசுவாசப்படுத்தி விட்டு மற்ற மேட்டர்களுக்குத் தாவினோம். சம்பளம்ஜாஸ்தியாக கேட்கிறீர்களாமே சேச்சி என்று கேட்டபோது, அதெல்லாம் சுத்த வதந்தி.இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று யாரிடமும் நான் கட்டாயப்படுத்தியதில்லை.எனது தந்தைக்குத்தான் எனது சம்பளம் குறித்து தெரியும் (அவர்தானுங்கோ அதிகமாககேட்கிறார்னு புகாரு!) என்று தப்பித்து விட்டார் ஆசின்.இப்போது தசாவதாரம் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் ஆசினுக்கு சொந்தமாககேரளாவில் 10க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளதாம். முன்பு ஆசின்தான்இவற்றை நிர்வகித்து வந்தார். நடிக்க வந்த பின்னர் தனது தந்தையிடம் ஒப்படைத்தார்.படப்பிடிப்புகளின்போது பாதுகாப்புக்காக இப்போது அச்சன் வர ஆரம்பித்துள்ளதால்இந்த நிறுவனங்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டனராம். ஆசினின் அம்மை ஒரு டாக்டராக்கும். அவர் மருத்துவத் தொழிலில்தீவிர கவனம் செலுத்துகிறார். இதனால் ஆசினுடன் வருவது அவருடைய அப்பாமட்டுமே.இருந்தாலும் குபேரன் இப்படி குண்டக்க மண்டக்க வரக் கூடாது...

By Staff
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த படப்பிடிப்பின்போது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாராம் ஆசின். நல்ல வேளையாக அவரது அச்சன் ஆற்றில் பாய்ந்துமகளைக் காப்பாற்றி கரை சேர்த்தாராம்.

தமிழுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கில் படு பிரபலமாக இருந்தவர் ஆசின்.இப்போது தமிழில் லீடிங்கில் இருந்தாலும் கூட தெலுங்கிலும் அவ்வப்போதுதலையைக் காட்டி வருகிறார் ஆசின்.

சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றின் ஷூட்டிங் ஆற்றங்கரையோரமாக நடந்தது.படப்பிடிப்பின்போது ஆற்றில் இறங்கிய ஆசின் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கிவிட்டாராம் அசின்.

இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த யாருக்கும் நீச்சல்தெரியாது என்பதால் எல்லோரும் தவித்துள்ளனர். அங்கிருந்த ஆசினின் தந்தை தான்டபால் என ஆற்றில் குதித்து நீந்தி, ஆற்றோடு போன ஆசினை காப்பாற்றி கரைக்குக்கொண்டு வந்தாராம்.

ஆசினின் அப்பா முன்பு சிபிஐயில் வேலை பார்த்தவர். நீச்சல் உள்ளிட்ட பல ஸ்கில்ஸ்கொண்டவர். நல்ல வேளையாக அவர் ஷூட்டிங்குக்கு வந்திருந்ததால் ஆசினைக்காப்பாற்ற முடிந்ததாம்.

இந்த சம்பவம் குறித்து ஆசின் கூறுகையில், அய்யோ, அது மறு பிறவி. எனது தந்தைஇருந்ததால் உயிர் பிழைத்தேன் என்கிறார்.

ஆசினை ஆசுவாசப்படுத்தி விட்டு மற்ற மேட்டர்களுக்குத் தாவினோம். சம்பளம்ஜாஸ்தியாக கேட்கிறீர்களாமே சேச்சி என்று கேட்டபோது, அதெல்லாம் சுத்த வதந்தி.இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று யாரிடமும் நான் கட்டாயப்படுத்தியதில்லை.எனது தந்தைக்குத்தான் எனது சம்பளம் குறித்து தெரியும் (அவர்தானுங்கோ அதிகமாககேட்கிறார்னு புகாரு!) என்று தப்பித்து விட்டார் ஆசின்.

இப்போது தசாவதாரம் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் ஆசினுக்கு சொந்தமாககேரளாவில் 10க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளதாம். முன்பு ஆசின்தான்இவற்றை நிர்வகித்து வந்தார். நடிக்க வந்த பின்னர் தனது தந்தையிடம் ஒப்படைத்தார்.

படப்பிடிப்புகளின்போது பாதுகாப்புக்காக இப்போது அச்சன் வர ஆரம்பித்துள்ளதால்இந்த நிறுவனங்களை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டனராம். ஆசினின் அம்மை ஒரு டாக்டராக்கும். அவர் மருத்துவத் தொழிலில்தீவிர கவனம் செலுத்துகிறார். இதனால் ஆசினுடன் வருவது அவருடைய அப்பாமட்டுமே.

இருந்தாலும் குபேரன் இப்படி குண்டக்க மண்டக்க வரக் கூடாது...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X