ஆசினும், 5 பாம்பாட்டிகளும்!
வேல் படத்தின் ஷூட்டிங் அம்பாசமுத்திரம் பக்கம் நடந்தபோது பாம்பாட்டிகளைத் துணைக்கு வைத்துக் கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தினாராம் இயக்குநர் ஹரி. அந்த அளவுக்கு அங்கு பாம்புகள் தொல்லை தாங்க முடியவில்லையாம்.
| Click here for more images |
ஹரி இயக்கத்தில் ஆசின் நடிக்கும் படம் வேல். படத்தின் பெரும் பகுதியை சுட்டு முடித்து விட்டனர். சமீபத்தில் அம்பாசமுத்திரம் பக்கம் வைத்து பல காட்சிகளை சுட்டுத் தள்ளினார் வேல்.
ஒரு டான்ஸ் காட்சியை படமாக்கியபோது பாம்புகள் பெரும் பஞ்சாயத்து பண்ணி விட்டனவாம். ஆசின் ஆடியபோது, அவருடன் சேர்ந்து அந்தப் பக்கம் இருந்த ஏராளமான பாம்புகளும் ஒன்று திரண்டு வந்து விட்டனவாம்.
இதைப் பார்த்து ஆசின் சற்றும் அசரவில்லை. மாறாக, ஆடும் பாம்புகளைப் பார்த்து ரசித்துள்ளார். ஆனால் ஹரிதான் கொஞ்சம் ஆடிப் போய் விட்டாராம்.
ஒன்று கிடக்க ஒன்றாகி விட்டால் என்னாவது என்ற பயத்தில், 5 பாம்பாட்டிகளைக் கூப்பிட்டு வந்து படப்பிடிப்பு முடியும் வரை கூடவே இருங்கப்பா, பாம்பு ஏதாவது வந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டு கூடவே வைத்திருந்தாராம்.
இதனால் அம்பாசமுத்திரம் டிரிப் முடியும் வரை பாம்பாட்டிகளும் கூடவே இருந்தார்களாம்.
இதேபோல நமீபியாவுக்கு சில காட்சிகளை ஷூட் செய்ய சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே நரிகளும், நெருப்புக் கோழிகளும் நடமாடியுள்ளன. அதைப் பார்த்து ஹோட்டல்காரர்களும், படப்பிடிப்புக் குழுவினரும் ஹோட்டலை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளனர்.
ஆனால் ஆசினுக்கோ நரியைப் போய் அருகில் பார்க்க முடியுமா, நெருப்புக் கோழியைத் தொட்டுத் தடவ முடியுமா என்று கேட்டு அத்தனை பேருக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளார்.
இருந்தாலும் ஆசினுக்கு தைரியம் கொஞ்சம் கூடத்தான்!


Click it and Unblock the Notifications











