»   »  அசினுக்கு அடித்த லக்கி பிரைஸ் !

அசினுக்கு அடித்த லக்கி பிரைஸ் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரமுடன் ஜோடி சேருகிறார் அசின். படத்தின் பெயர் மஜா.

அந்நியனுக்குப் பிறகு 2 படங்களில் நடிக்கப் போகிறார் விக்ரம். ஒன்று மலையாள ரீமேக். இன்னொன்று மஜா என்று பெயரிடப்பட்டுள்ள ஜாலியானபடம். இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம்.

அந்நியனில் ஒன்றரை வருடங்களாக நடிக்கப் போய் பெரிய அளவில் கேப் விழுந்து விட்டதாக நினைத்த விக்ரம், இதை சரி செய்ய 2 படங்களில் நடித்து விட முடிவுசெய்தார்.

மஜா படத்தில் அவருடன் நடிக்க முதலில் திரிஷாவை கூப்பிட்டுள்ளார்கள். சாமி படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து கலக்கியதால், இந்தப் படத்திலும் திரிஷாவசேர்த்து செம காசு பார்த்து விடலாம் என்ற நினைப்பில்தான் திரிஷாவை அணுகியுள்ளார்கள்.

ஆனால் அம்மணியோ ரொம்பவே அலட்டிக் கொண்டாராம். என்னோட சம்பளம் இப்போ கூடிப் போச்சு, அது மட்டுமல்லாமல் நிறைய தெலுங்குப்படங்களிலும் புக் ஆகியுள்ளேன். விக்ரம் சாருக்காக நடிக்க வர்றேன். ஆனால் என்னோட சம்பளத்தைக் குறைக்க மாட்டேன், தெலுங்குப் படஷூட்டிங்குக்குப் போக வேண்டியிருந்தால் அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார் திரிஷா.

பார்த்தார்கள், திரிஷாவை டிராப் செய்து விட்டு வேறு ஹீரோயினைத் தேடியுள்ளார்கள். அசின் சிக்கவே அவரைப் பிடித்துப் போட்டு விட்டார்கள். திரிஷாமறுக்கப் போக அசினுக்கு லக்கி பிரைஸ் கிடைத்துள்ளது.

நயன்தாராவின் போட்டி காரணமாக கொஞ்சம் மூட் அவுட் ஆகிக் காணப்பட்ட அசின், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கெட்டஆட்டத்திற்கும் தயார் என்ற உத்தரவாதத்துடன் விக்ரமுடன் சேர்ந்து கலக்க காத்துள்ளார்.

கலக்கலைப் பார்க்க நாங்களும் ரெடி!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil