சசிக்குமாரின் ‘அயோத்தி‘... மதுரையில் படப்பிடிப்பு தொடக்கம் !
சென்னை : சசிக்குமாரின் அயோத்தி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ் பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இத்திரைப்படத்தை மந்திர மூர்த்தி இயக்க, என்ஆர்.ரகுநந்தன் இசையமைக்க உள்ளார்.

சசிக்குமார்
இயக்குனர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மைக் கொண்ட சசிக்குமார். அசிஸ்டென்ட் டைரக்டராக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். சுப்ரமணியபுரம் படம் மூலம் நடிகர், இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அடுத்து தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.

அயோத்தி பட பூஜை
பல திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சசிக்குமார் தற்போது அயோத்தி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் துவங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கிறது. 45 நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. என்ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார்.

கதை பிடித்து விட்டது
எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. சசிகுமாருக்கு கதை மிகவும் பிடித்து இருந்ததால் கதையை கேட்டவுடன் இப்படத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒகே சொன்னதாக இப்படத்தின் இயக்குனர் மந்திர மூர்த்தி தெரிவித்தார்.
Recommended Video

பல படங்களில்
சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடித்த உடன்பிறப்பே ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது . அதேபோல, பொன்ராம் இயக்கத்தில் உருவான எம்.ஜி.ஆர் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.


Click it and Unblock the Notifications











