சூட்டிங் ஸ்பாட்

By Staff

மும்பை:

மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்படும்திரைப்படத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இதில் அமிதாப்பச்சன் இந்திரனாகவும், ஜாக்கிஷெராஃப் தலைமை மத குருவாகவும்,ரவீனா டாண்டன் அவரது மனைவியாகவும், நாகார்ஜுனா தலைமை மத குரு மீதுபொறாமை கொண்ட எதிரியாகவும், பிரபுதேவா ராட்ஷசனாகவும் (நல்ல ரோல்!)நடிக்கிறார்கள்.

பெங்களூர் நாடக உலகில் புகழ்பெற்று விளங்கும் அர்ஜுன் சாஜ்னானி இயக்கும் முதல்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தகக்கது. இந்த படம்அக்னி-வர்ஷா என்றபெயரில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தின் ஹம்பியில்தற்போது நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை தான் இயக்குவதற்கான காரணம் குறித்து சாஜ்னானி கூறுகையில்,இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. இந்த கதையை நாடகவடிவமாக்கிக்கொடுத்தவர் புகழ்பெற்ற எழுத்தாளரும் நடிகருமான கிரீஷ் கர்னாட்.

பல தரப்பட்ட மக்களும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில்நடத்தப்பட்டு வந்த நாடகத்தை இந்தியில் திரைப்படமாக இயக்குகிறேன்.

இந்த படத்தை தயாரிக்கும் நைன் கோல்ட் நிறுவனத்தாரின் ஒத்துழைப்பு என்னைபிரமிக்க வைக்கிறது என்றார்.

நிறுவனத்தின் தலைவர் ரவீனா கோலி கூறுகையில், சஜ்னானியின் நாடகங்கள்மக்களிடம் பெற்றிருககும் வரவேற்பு பற்றி கேள்விப்பட்டேன். சஜ்னானியின்இயக்கக்தில் திரைப்படம் எடுப்பது என முடிவு செய்தோம்.

இந்த திரைப்படத்தில் ஹம் டில் டி சுக்கே சனம் மற்றும் லாகான் திரைப்படங்களில்ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அனில் மேத்தா ஒளிப்பதிவாளராகபணியாற்றுகிறார். இவர் ஹம்பி பகுதியை கண்ணைக் கவரும் விதத்தில் படமாக்கிவருகிறார் என்றார்.

பிரபு தேவாவுக்கு ராட்ஷசன் வேடம் கொடுக்கப்பட்ட போது அவர் தனக்கு டான்ஸ்,பாடல் வேண்டும் என்று அடம் பிடித்ததால் அவருக்காக ஒரு டான்சும் பாடலும்உடனடியாக படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சஜ்னானி இது வரை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மொத்தம் 20 நாடகங்களைஇயக்கியுள்ளார். இவர் இந்தி நடிகர்களை வானளாவ புகழ்ந்துள்ளார்.

ரவீனா டாண்டனை தலைமை மதகுருவின் மனைவி பாத்திரத்தில் நடிப்பதற்காகதேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி சன்ஜானி கூறுகையில், அந்த பாத்திரத்துக்குபுத்தசாலியான நடிகை வேண்டும் என எண்ணினேன்.

ரவீனாவின் தோற்றம், அவரது நடிக்கும் பாணி, சவாலான பாத்திரங்களை ஏற்று நடிக்ககாட்டும் ஆர்வம் ஆகியவை இந்த பாத்திரத்தில் நடிக்க பொருத்தமானவர் அவர்தான்என தோன்றியதால் அவரை தேர்ந்தெடுத்தேன்.

அமிதாப்பச்சனை மாணவப் பருவத்திலிருந்தே எனக்குத் தெரியும். டெல்லியில்நாங்கள் நாடகங்களில் இணைந்து நடித்திருக்கிறோம். அவரை இந்திரன் பாத்திரம்ஏற்று நடிக்க முடியுமா என்று கேட்டதும் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார்.

இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும்மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்கள். அனைவரும் இந்த படம் வெற்றிபடமாக அமைய வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

ஜாக்கி ஷெராஃப் இந்த படத்தில் வேட்டி கட்டிக் கொண்டு நடிக்கிறார். இந்த படத்தில்நடிப்பதற்காக அவர் தன் மீசையை கூட துறந்துள்ளார். இந்தி நடிகர்களிடம் நல்லதிறமை இருக்கிறது(!). அதை நான் நன்கு உபயோக்கப்படுத்தித் கொள்ளவிரும்புகிறேன் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X