சைக்கிளில் சூட்டிங்கிற்கு வரும் ராஜமவுலி...
பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது சூட்டிங் ஸ்பாட்டிற்கு சைக்கிளில்தான் சிம்பிளாக வருகிறார்.
தற்போது பாகுபாலி என்ற படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார்.
அக்டோபர் 23ம் தேதி இப்படத்தின் ஹீரோ பிரபாஸ் பிறந்நாளை முன்னிட்டு மேக்கிங் ஆப் பாகுபாலி ட்ரைலர் வெளியானது அதில் ராஜமவுலி சைக்கிளில் சூட்டிங்கிற்கு வருவது, அவருடைய எளிமையான ஸ்டைல் ஆப் மேக்கிங் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யுடியூப்பில் வெளியான 30 மணி நேரத்திற்குள்ளாக 5 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

பிரம்மாண்ட பாகுபாலி
பாகுபாலி சரித்திரம் கலந்த பேண்டஸி கதை. 3டி டெக்னிக்கில் மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்க இருக்கிறார்கள். சுமார் 200 கோடி செலவில் தயாரகும் இந்தப் படத்தை பிரசாத் தேவினேனி, ஷோபு யர்லகட்டா தயாரிக்கிறார்கள்.

எஸ்.எஸ். ராஜமவுலி
மாவீரன் (மகதீரா), நான் ஈ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தெலுங்கு டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட். இப்போது தயாராகிவரும் பாகுபாலி அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

தமிழில் மகாபாலி
தமிழில் இந்த படத்திற்கு மகாபாலி என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ் வசனங்களையும், பாடல்களையும் மதன் கார்க்கி எழுதுகிறார்.

பிரபாஸ் - அனுஷ்கா
பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின். ரம்யாகிருஷ்ணன், நாசர் நடிக்கிறார்கள். பிரபாஸ் தவிர மற்ற அனைவரும் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த நடிகர்கள்.

ஸ்ரீதேவி – சத்யராஜ்
பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜ், வில்லனாக ராணா, கோபிசந்த் என்று பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்!

ரம்யா கிருஷ்ணன்
இதில் படத்தின் தயாரிப்பு தொடர்பான காட்சிகள் (மேக்கிங் ஆப் பாகுபாலி) யுடியூப்பில் அக்டோபர் 23ம் தேதி வெளியானது. பிரபாஸ், வாள் சண்டை கற்பது, ரம்யா கிருஷ்ணன் ஸ்கிரிப்ட் படிப்பது, டைரக்டர் ராஜமவுலி சைக்கிளில் படப்பிடிப்புக்கு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. கடைசி 3 விநாடிகள் படத்தின் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்

2015ல் ரிலீஸ்
3டி வேலைகளை முடிப்பதற்கு அதிக நாட்கள் ஆகும் என்பதால், 2015-ம் ஆண்டு கோடை விடுமுறையில் தான் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











