»   »  நான் கடவுள் சூட்டிங்! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலாவின் நான் கடவுள் படத்தின் ஷூட்டிங்வரும் 27ம் தேதி தொடங்குகிறது.பிதாமகனுக்குப் பிறகு மாயாவி என்ற படத்தைத் தயாரித்த பாலா அதன் பின்னர்அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்புவெளியானது. படத்திற்கு நான் கடவுள் என்று பெயர் சூட்டிய பாலா, ஹீரோவாகஅஜீத்தை புக் செய்தார்.ஆனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் அஜீத்துக்கும், பாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகிளம்பியது. இதையடுத்து படத்திலிருந்து விலகிக்கொண்டார் அஜீத்.இதையடுத்து ஆர்யாவை ஹீரோவாக அறிவித்த பாலா, சூட்டோடு சூடாகபடத்திற்கான பூஜையையும் போட்டு முடித்தார். ஷூட்டிங் தொடங்குவதில் மறுபடியும்சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே சரணின் வட்டாரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஆர்யா, அதை விட்டுவிட்டு நான் கடவுளுக்குத் தாவியதால் கடுப்பானசரண், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார். ஆர்யாவைக் கூப்பிட்டு விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும், சரண்படத்தை முடித்துவிட்டுத் தான் பாலா படத்திற்குப்போக வேண்டும் என்றுஉத்தரவிட்டது. இதையடுத்து வேண்டா வெறுப்புடன் சரண் படத்தில் நடித்து வருகிறார்ஆர்யா. இயந்திரத்தனமாக அவர் வட்டாரம் படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள்.வட்டாரம் படப்பிடிப்பு முடியும் கட்டத்தை நெருங்கியுள்ளதால், தனது நான் கடவுள்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் பாலா. இதன் படி 27ம் தேதி ஷூட்டிங்தொடங்குகிறது. சென்னை அருகே உள்ள நசரத்துப் பேட்டை பகுதியில்முதல் கட்டபடப்பிடிப்பை வைத்துள்ளார் பாலா. இங்கு ஆர்யா, பாவனா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படமாக்கவுள்ளார்.இதையடுத்து தென்காசியில் 2வது கட்டப்பிடிப்பு தொடர்கிறது. அதன் பின்னர் தேனிபக்கம் சில காட்சிகளை சுடவுள்ளார் பாலா. காசியிலும் படப்பிடிப்பு நடைபெறும்எனத் தெரிகிறது.

நான் கடவுள் சூட்டிங்! பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலாவின் நான் கடவுள் படத்தின் ஷூட்டிங்வரும் 27ம் தேதி தொடங்குகிறது.பிதாமகனுக்குப் பிறகு மாயாவி என்ற படத்தைத் தயாரித்த பாலா அதன் பின்னர்அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்புவெளியானது. படத்திற்கு நான் கடவுள் என்று பெயர் சூட்டிய பாலா, ஹீரோவாகஅஜீத்தை புக் செய்தார்.ஆனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் அஜீத்துக்கும், பாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகிளம்பியது. இதையடுத்து படத்திலிருந்து விலகிக்கொண்டார் அஜீத்.இதையடுத்து ஆர்யாவை ஹீரோவாக அறிவித்த பாலா, சூட்டோடு சூடாகபடத்திற்கான பூஜையையும் போட்டு முடித்தார். ஷூட்டிங் தொடங்குவதில் மறுபடியும்சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே சரணின் வட்டாரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஆர்யா, அதை விட்டுவிட்டு நான் கடவுளுக்குத் தாவியதால் கடுப்பானசரண், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார். ஆர்யாவைக் கூப்பிட்டு விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும், சரண்படத்தை முடித்துவிட்டுத் தான் பாலா படத்திற்குப்போக வேண்டும் என்றுஉத்தரவிட்டது. இதையடுத்து வேண்டா வெறுப்புடன் சரண் படத்தில் நடித்து வருகிறார்ஆர்யா. இயந்திரத்தனமாக அவர் வட்டாரம் படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள்.வட்டாரம் படப்பிடிப்பு முடியும் கட்டத்தை நெருங்கியுள்ளதால், தனது நான் கடவுள்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் பாலா. இதன் படி 27ம் தேதி ஷூட்டிங்தொடங்குகிறது. சென்னை அருகே உள்ள நசரத்துப் பேட்டை பகுதியில்முதல் கட்டபடப்பிடிப்பை வைத்துள்ளார் பாலா. இங்கு ஆர்யா, பாவனா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படமாக்கவுள்ளார்.இதையடுத்து தென்காசியில் 2வது கட்டப்பிடிப்பு தொடர்கிறது. அதன் பின்னர் தேனிபக்கம் சில காட்சிகளை சுடவுள்ளார் பாலா. காசியிலும் படப்பிடிப்பு நடைபெறும்எனத் தெரிகிறது.

Subscribe to Oneindia Tamil

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாலாவின் நான் கடவுள் படத்தின் ஷூட்டிங்வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

பிதாமகனுக்குப் பிறகு மாயாவி என்ற படத்தைத் தயாரித்த பாலா அதன் பின்னர்அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்புவெளியானது. படத்திற்கு நான் கடவுள் என்று பெயர் சூட்டிய பாலா, ஹீரோவாகஅஜீத்தை புக் செய்தார்.

ஆனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் தான் அஜீத்துக்கும், பாலாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகிளம்பியது. இதையடுத்து படத்திலிருந்து விலகிக்கொண்டார் அஜீத்.

இதையடுத்து ஆர்யாவை ஹீரோவாக அறிவித்த பாலா, சூட்டோடு சூடாகபடத்திற்கான பூஜையையும் போட்டு முடித்தார். ஷூட்டிங் தொடங்குவதில் மறுபடியும்சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே சரணின் வட்டாரம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஆர்யா, அதை விட்டுவிட்டு நான் கடவுளுக்குத் தாவியதால் கடுப்பானசரண், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்தார்.


ஆர்யாவைக் கூப்பிட்டு விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சிலும், நடிகர் சங்கமும், சரண்படத்தை முடித்துவிட்டுத் தான் பாலா படத்திற்குப்போக வேண்டும் என்றுஉத்தரவிட்டது. இதையடுத்து வேண்டா வெறுப்புடன் சரண் படத்தில் நடித்து வருகிறார்ஆர்யா. இயந்திரத்தனமாக அவர் வட்டாரம் படத்தில் நடித்து வருவதாக கூறுகிறார்கள்.

வட்டாரம் படப்பிடிப்பு முடியும் கட்டத்தை நெருங்கியுள்ளதால், தனது நான் கடவுள்படத்தை ஆரம்பிக்க முடிவு செய்தார் பாலா. இதன் படி 27ம் தேதி ஷூட்டிங்தொடங்குகிறது. சென்னை அருகே உள்ள நசரத்துப் பேட்டை பகுதியில்முதல் கட்டபடப்பிடிப்பை வைத்துள்ளார் பாலா.


இங்கு ஆர்யா, பாவனா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை படமாக்கவுள்ளார்.இதையடுத்து தென்காசியில் 2வது கட்டப்பிடிப்பு தொடர்கிறது. அதன் பின்னர் தேனிபக்கம் சில காட்சிகளை சுடவுள்ளார் பாலா. காசியிலும் படப்பிடிப்பு நடைபெறும்எனத் தெரிகிறது.
Read more about: balas film shooting to begin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil