பாலா ஷூட்டிங் - 365 நாட்கள் காத்திருந்து திரும்பிய நாயகிகள்...

By Shankar

சில விஷயங்களை ஏன் எதற்கு என்று கேட்டாலும் விளக்கம் கிடைக்காது. இயக்குநர் பாலா விவகாரமும் அப்படித்தான்.

அவர் ஷூட்டிங் வைத்தாலும், வைக்காமல் விட்டாலும், கதையை மாற்றினாலும் காத்திருக்க வைத்தாலும் ஏன் என்று கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

இதன் விளைவு இரண்டு கதாநாயகிகள் 365 நாட்கள் தேனியில் சும்மாவே உட்கார்ந்திருந்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

பாலா இப்போது இயக்கி வரும் அவன் இவன் படத்தில் நாயகிகளாக நடித்துள்ளவர்கள் மது ஷாலி்னியும் ஜனனியும். 10 காட்சியில் வரும் அளவுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

பிறகு சொல்லியனுப்பும்போது வந்தால் போதும் என்று கூறி தேனி ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தார்களாம்.

அவ்வளவுதான். அதன் பிறகு அவர்களை மறந்தே போனார் பாலா. காரணம், கதை முழுக்க ஹீரோக்களும் வில்லனுமே ஆக்கிரமித்துக்கொள்ள, ஹீரோயின்கள் அவசியப்படவே இல்லையாம்.

படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைக்கும்போதுதான் சொல்லியனுப்பினார்களாம் ஹீரோயின்களுக்கு.

இப்பவாவது நினைவு வந்ததே என்ற பெருமூச்சுடன் திரும்பியிருக்கிறார்கள் ஹீரோயின்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X