Akhanda 2: அகண்டா தாண்டவம்.. பட பூஜை அன்னைக்கே பஞ்ச் டயலாக்கில் ஃபயர் விடுறாரே பாலகிருஷ்ணா!

ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகவுள்ள அகண்டா 2 தாண்டவம் படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல தெலுங்கு இயக்குநரான போயபதி சீனு இயக்கத்தில் மீண்டும் இணையவுள்ளார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இன்று நடைபெற்ற பூஜையில் அவர் கலந்துக் கொண்டு பஞ்ச் வசனம் பேசிய காட்சி படமாக்கப்பட்டது.

கடந்த 2021ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா படம் மிகப்பெரிய வெற்றியை தியேட்டரிலும் அதன் பின்னர் ஓடிடியில் வெளியாகியும் பெற்றது. பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற சரியான கதை என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கொண்டாடினர்.

akhanda 2 balakrishna shooting spot 2

தமிழில் அந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரீமேக் செய்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் அப்போது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், அதன் 2ம் பாகத்தை ஆரம்பித்துள்ளார் பாலகிருஷ்ணா.

ஆக்‌ஷன் சாம்ராட்: டோலிவுட்டில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடிகர்கள் மத்தியில் பஞ்சமே இருக்காது. மெகா ஸ்டார் முதல் நானி வரை சும்மா எதிரிகளை பறக்கவிடுகின்றனர். அவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆக்‌ஷன் சாம்ராட்டாகவே பாலகிருஷ்ணா தூள் கிளப்பி வருகிறார். அதிலும் அவர் நடித்த அகண்டா படத்தில் Both are not same என பஞ்ச் வசனம் சொல்லிவிட்டு அவர் டபுள் ஆக்‌ஷனில் நடித்தது பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

அகண்டா கதை என்ன?: ஒரு பாலகிருஷ்ணாவை குழந்தையிலேயே அவரது பிறப்பு அழிவை உருவாக்கும் என சொல்லி விட்டு அகோரிகள் வசம் விட்டு விடுகின்றனர். இன்னொரு பாலகிருஷ்ணா மக்களுக்கு சேவை செய்யும் நபராக வருகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சிக்கல் ஏற்படும் போது அகண்டா பாலகிருஷ்ணா களமிறங்கி எதிரிகளை பந்தாடுவது தான் படத்தின் கதை. அமானுஷ்ய சக்திகளை எல்லாம் வைத்து அட்டகாசமான மேக்கிங்கை இயக்குநர் போயபதி சீனு இயக்க தமன் மரண மாஸ் பிஜிஎம் போட்டு படத்தை ஹிட் ஆக்கியிருப்பார்.

akhanda 2 balakrishna shooting spot 2

அகண்டா 2 ஆரம்பம்: இந்நிலையில், அக்டோபர் 16ம் தேதியான இன்று அகண்டா 2 படத்துக்கான பூஜை போடப்பட்டு அகண்டா தாண்டவம் என பாலய்யா வசனம் பேசும் காட்சிகளுடன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்த படத்தையும் போயபதி சீனு தான் இயக்குகிறார். அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? அல்லது தனிக்கதையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்துக்கும் தமன் தான் மியூசிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X