பாங்காக்கிற்கு படையெடுக்கும் கோலிவுட்... படம் எடுக்கத்தான்!

சென்னை: சமீப காலமாக கோடம்பாக்க தயாரிப்பாளர்களின் கவனம் பாங்காக் பக்கம் திரும்பியிருக்கிறதாம்.

தமிழ் பட ஷூட்டிங்கிற்காக பாங்காக்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதே இதற்கு காரணமாம். இதனால், வெளிநாடு என்றாலே படக்குழுவினர் உடனடியாக பாங்காங் பறந்து விடுகிறார்களாம்.

தற்போது இந்த வரிசையில் உலகநாயகனும் இணைந்து விட்டார். விஸ்வரூபம் 2-ன் மீதிக் காட்சிகள் சில பாங்காக்கில் படமாக்கப்பட உள்ளதாம்.

’தல’ ஷீட்டிங்...

’தல’ ஷீட்டிங்...

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் ஷீட்டிங் சமீபத்தில் பாங்காக்கில் நடந்தது. இதில் அஜீத்துடன் நயன்தாரா, ஆர்யா மற்றும் டாப்ஸி ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்றென்றும் புன்னகை...

என்றென்றும் புன்னகை...

இதையடுத்து ஜீவா, த்ரிஷா, வினய், ஆண்ட்ரியா நடிக்கும் என்றென்றும் புன்னகை பட ஷூட்டிங் அங்கு நடந்தது.

பாங்காக்கின் ஆதி-பகவன்...

பாங்காக்கின் ஆதி-பகவன்...

இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக ஜெயம் ரவி நடிப்பில் உருவான அமீரின் ஆதி-பகவன் பாங்காக்கில் தான் படமானது.

விஸ்வரூபம்-2...

விஸ்வரூபம்-2...

தற்போது கமலும் விஸ்வரூபம்-2க்காக பாங்காக் பறக்கிறார். படத்தின் பெரும்பகுதியை தாய்லாந்தில் படமாக்கிய கமல், சில ஆக்‌ஷன் மற்றும் பாடல் காட்சிகளை பாங்காக்கில் படமாக்க முடிவெடுத்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X