»   »  பப்பளபள பானு!

பப்பளபள பானு!

Subscribe to Oneindia Tamil

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள லேட்டஸ்ட் சாரை பானு. பார்த்தவுடன்பச்சக் என நெஞ்சில் குந்திக் கொள்ளும் அளவுக்கு கும் அழகு. பேசினாலோ குயில்தோத்துப் போகும். அப்படி ஒரு அட்டாக் தேவதை தான் பானு.

ஓரமாக நின்னு பார்த்தால் நயனதாரா மாதிரியே இருக்கிறார். அவரைப் போலவேஇவருக்கும் உதடு அழகு, முகம் அழகு, சிரிப்பு அழகு. மொத்தத்தில் இவரைப்பார்க்கும் யாரும் மெத்தனமாக மட்டும் இருந்து விட முடியாது.

தாமிரபரணி படத்தில் பானுதான் நாயகி. கருப்பு நாயகன் விஷால்தான் ஹீரோஎன்றாலும் படத்தின் துருப்புச் சீட்டாக பானுவைத்தான் களம் இறக்கியுள்ளாராம் ஹரி.

இந்த இடத்தில் ஹரியைப் பத்தி ஒரு சேதி. இதே ஹரிதான் நயனதாரா என்றதேவதையை கோலிவுட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தவர் (சிம்பு தேங்க்ஸ்சொல்லச் சொன்னார்ணா!). இப்போது அதே கேரளத்திலிருந்து கொஞ்சம் நயனதாராசாயலில் பானுவைக் கொய்து கொண்டு வந்துள்ளார் ஹரி.

வழக்கமான ஹரி படம் போல இதுவும் கிராமத்துப் பின்ணியில் அமைந்த படம்தான்.நெல்லை மாவட்டத்தை சீராட்டி, நீரூற்றி கொழிக்க வைத்துக் கொண்டிருக்கும்தாமிரபரணி ஆற்றங்கரையோரமாக படத்தை எடுத்திருக்கிறார் ஹரி.

அதென்னமோ ஹரி எடுக்கும் சமீப காலப் படங்கள் எல்லாம் ஆத்தை ஒட்டியேஅமைந்துள்ளது. சாமி தாமிரபரணி ஆற்றுக் கதை. கோவில், நாகர்கோவில் பக்கம்உள்ள ஆற்றையொட்டிய கதை. ஆறு, சென்னை கூவம் ஆற்றையொட்டிய கதைப்பின்னணியைக் கொண்டது.

இப்போது தாமிரபரணி படத்திலும் ஆறு இருக்கிறதாம்.

ஹரி போதும். பானு பக்கம் போவோம். பானுவுக்கு வெண்ணைக் குரல். இந்தப்படத்தில் நானே டப்பிங் பேசுகிறேன் என்று ஹரியிடம் கூறினாராம். அவரும் குரல்நன்னாதான் இருக்கு. இருந்தாலும் தமிழை தமிழ் போலவே பேச வேண்டும்.இல்லாட்டி எங்க ஆட்கள் நொங்கெடுத்திருவாங்க.

நீங்க தமிழ் பேசினால் அது மலையாளமா, தமிழா என்ற தேவையில்லாத சந்தகேம்எல்லாம் வரும். அதனால் முதலில் ல, ள, ழ வித்தியாசத்தைப் பழகிக் கொள்ளுங்கள்.அப்புறம் பார்க்கலாம். இப்போதைக்கு இந்தப் படத்தில் நீங்க பேச வேண்டாம் என்றுநைசாக கழற்றி விட்டு விட்டாராம்.

இருந்தாலும் மனம் தளராத பானு இன்னும் 2 படங்களில் நடித்த பிறகு எனக்கு நானேபேசிக் கொள்ளப் போகிறேன் என்று தைரியமாக கூறி வருகிறார். அத்தனை படம்நடிச்ச பிறகு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லாம் நீங்க சொல்றதைத்தானேகேட்பாங்க!

பானு, பார்த்தாலே பரவசம்!

Read more about: bhanu in thamiraparani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil