»   »  அம்முவாகிய நான் ...!

அம்முவாகிய நான் ...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பார்த்திபன் நடிக்க, அம்முவாகிய நான் என்ற வித்தியாசமான கதைப் பின்னணியைக்கொண்ட படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முற்றிலும் பார்த்திபன் ஸ்டைலில் உருவாகும்படம்தான் அம்முவாகிய நான். முதலில் இப்படத்திற்கு அழகிகள் என்று பெயர்வைத்திருந்தனர். ஆனால் இப்போது அம்முவாகிய நான் என்று மாற்றி விட்டனர்.

முற்றிலும் வித்தியாசமான படம் இது. முதலில் காதல் பின்னர் காமம் என்பதைத்தான்பல சினிமாக்களில் காட்டியுள்ளனர். ஆனால் இந்தப் படத்தில் முதலில் காமம் பிறகுகாதல் என்று வித்தியாசப்படுத்திக் காட்டப் போகிறோம் என்கிறார் இயக்குநர்பத்மாமகன்.

பல்லவன் என்ற படத்தைத் தயாரித்த பார்க்கர் பிரதர்ஸ் நிறுவனம்தான் இப்படத்தைத்தயாரிக்கிறது. படம் முழக்க ரத்தமும் சதையுமாக இருக்குமாம். காமத்தை படுதத்ரூபமாக, ஆபாசம் கலக்காமல் இதில் காட்டப் போகிறேன். ஆனால் அந்த காமத்தைமீறி மிளிரும் காதலைப் பார்த்து அனைவரும் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்என்கிறார் பத்மா மகன்.

இந்தப் படத்தில் பார்த்திபன் எழுத்தாளர் வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாகநடிப்பவர் பாரதி. விபச்சாரப் பெண்ணாக இதில் அவர் நடிக்கிறார். சந்தர்ப்பசூழ்நிலையால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட பெண்ணாக இல்லாமல், வலிய விரும்பிவிபச்சாரத்தில் ஈடுபடும் பெண் கேரக்டரில் பாரதி நடிக்கிறார்.

இந்தக் கேரக்டருக்காக பல முன்னணி நடிகைகளை அணுகியபோது அனைவரும்தெரித்து ஓடி விட்டனராம். ஆனால் பாரதிதான் தைரியமாக நடிக்க முன்வந்தாராம்.இந்தப் படத்தின் கதை பாரதியை கவர்ந்து விட்டதாம். சவாலான வேடம், நிச்சயம்எனக்கு இது பிரேக் கொடுக்கும் என்று தைரியமாக கூறுகிறார் பாரதி.

விபச்சாரப் பெண் வேடம் என்பதால் கிளர்ச்சியூட்டும் காட்சிகளில் நடிக்கவேண்டியிருக்கும், தத்ரூபமாக நடிக்க வேண்டியிருக்கும் என்று சொன்னபோதும்,எல்லாவற்றுக்கும் நான் ரெடி சார் என்று தைரியமாக சொன்னாராம் பாரதி.

பாரதியின் துணிச்சலான வார்த்தையைக் கேட்ட பின்னர்தான் தனது கதைக்கேற்றநடிகை இவர்தான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாராம் பத்மா மகன்.

ஏற்கனவே பாரதி தமிழில் தலை காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு அது சரியானஅறிமுகமாக இல்லை. ஆனால் அம்முவாகிய நான், பாரதியை தூக்கி நிறுத்தி விடும்என்று இப்போதே பேச்சு கிளம்பி விட்டது.

பாரதி, புதுமைப் பெண்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil