»   »  பாரதிராஜாவின் பொம்மலாட்டம் இயக்குனர் இமயம் பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் புடிக்கவருகிறார். இந்த முறை தனது தொழிலையே சப்ஜெக்ட்டாக எடுத்துக் கொண்டுள்ளார்.சினிமா எடுப்பது குறித்த கதைதான் பாரதிராஜா இயக்கப் போகும்பொம்மலாட்டத்தின் கதை. கண்களால் கைது செய் படம் மூலம் பிரியா மணியை தமிழுக்கும், தென்னகசினிமாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்த பாரதிராஜா அதற்குப் பிறகு படம் ஏதும்இயக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.இப்போது முழு வீச்சில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். பொம்மலாட்டம் என்றபெயரில் புதிய படத்தை இயக்குகிறார் ராஜா. இதே படம் இந்தியிலும் தயாராகிறது.அங்கு இதற்குப் பெயர் சினிமா.தெற்கத்தி கலைக்கூடம் இப்படத்தை தயாரிக்கிறது. அர்ஜூனும், நானா படேகரும்இணைந்து நடிக்கிறார்கள். நானா நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதுதவிர புதுமுக நாயகனையும்,நாயகியையும் அறிமுகப்படுத்துகிறார் பாரதிராஜா.படத்தின் பூஜை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அந்நாட்டு அமைச்சர் டத்தோசாமிவேலு முன்னிலையில் நடந்தது.மலேசியா, சிங்கப்பூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பைநடத்தவுள்ளார் பாரதிராஜா. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும்இப்படத்திற்கு இசையமைப்பவர் மும்பையைச் சேர்ந்த ஹிமேஷ் ரேஷ்மய்யா.சமீபகாலமாக வி டிவி, எம் டிவி என எந்த இசை டிவியைப் போட்டாலும் கண்ணில்படுபவர் ரேஷ்மய்யா தான். சூப்பர் குரலில் தானே பாடி இசையும் அமைக்கும்டேலன்ட் கொண்டவர்.பாடல்களை வழக்கம் போல வைரமுத்து எழுத, ஒளிப்பதிவு செய்கிறார்பாரதிராஜாவின் கண்களான கண்ணன்.கலையை சாபு சிரில் கவனிக்கிறார்.ஏற்கனவே இப்படம் குறித்து மும்பையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திப்பதிப்பான சினிமாவின் பல காட்சிகளை ஏற்கனவே பாரதிராஜா எடுத்து முடித்துவிட்டார்.பாரதிராஜா சார்.. உங்க வீட்டு விருந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, சீக்கிரம்போடுங்க.

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் இயக்குனர் இமயம் பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் புடிக்கவருகிறார். இந்த முறை தனது தொழிலையே சப்ஜெக்ட்டாக எடுத்துக் கொண்டுள்ளார்.சினிமா எடுப்பது குறித்த கதைதான் பாரதிராஜா இயக்கப் போகும்பொம்மலாட்டத்தின் கதை. கண்களால் கைது செய் படம் மூலம் பிரியா மணியை தமிழுக்கும், தென்னகசினிமாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்த பாரதிராஜா அதற்குப் பிறகு படம் ஏதும்இயக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.இப்போது முழு வீச்சில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். பொம்மலாட்டம் என்றபெயரில் புதிய படத்தை இயக்குகிறார் ராஜா. இதே படம் இந்தியிலும் தயாராகிறது.அங்கு இதற்குப் பெயர் சினிமா.தெற்கத்தி கலைக்கூடம் இப்படத்தை தயாரிக்கிறது. அர்ஜூனும், நானா படேகரும்இணைந்து நடிக்கிறார்கள். நானா நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதுதவிர புதுமுக நாயகனையும்,நாயகியையும் அறிமுகப்படுத்துகிறார் பாரதிராஜா.படத்தின் பூஜை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அந்நாட்டு அமைச்சர் டத்தோசாமிவேலு முன்னிலையில் நடந்தது.மலேசியா, சிங்கப்பூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பைநடத்தவுள்ளார் பாரதிராஜா. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும்இப்படத்திற்கு இசையமைப்பவர் மும்பையைச் சேர்ந்த ஹிமேஷ் ரேஷ்மய்யா.சமீபகாலமாக வி டிவி, எம் டிவி என எந்த இசை டிவியைப் போட்டாலும் கண்ணில்படுபவர் ரேஷ்மய்யா தான். சூப்பர் குரலில் தானே பாடி இசையும் அமைக்கும்டேலன்ட் கொண்டவர்.பாடல்களை வழக்கம் போல வைரமுத்து எழுத, ஒளிப்பதிவு செய்கிறார்பாரதிராஜாவின் கண்களான கண்ணன்.கலையை சாபு சிரில் கவனிக்கிறார்.ஏற்கனவே இப்படம் குறித்து மும்பையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திப்பதிப்பான சினிமாவின் பல காட்சிகளை ஏற்கனவே பாரதிராஜா எடுத்து முடித்துவிட்டார்.பாரதிராஜா சார்.. உங்க வீட்டு விருந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, சீக்கிரம்போடுங்க.

Subscribe to Oneindia Tamil

இயக்குனர் இமயம் பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் புடிக்கவருகிறார். இந்த முறை தனது தொழிலையே சப்ஜெக்ட்டாக எடுத்துக் கொண்டுள்ளார்.சினிமா எடுப்பது குறித்த கதைதான் பாரதிராஜா இயக்கப் போகும்பொம்மலாட்டத்தின் கதை.

கண்களால் கைது செய் படம் மூலம் பிரியா மணியை தமிழுக்கும், தென்னகசினிமாவுக்கும் தாரை வார்த்துக் கொடுத்த பாரதிராஜா அதற்குப் பிறகு படம் ஏதும்இயக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.

இப்போது முழு வீச்சில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். பொம்மலாட்டம் என்றபெயரில் புதிய படத்தை இயக்குகிறார் ராஜா. இதே படம் இந்தியிலும் தயாராகிறது.அங்கு இதற்குப் பெயர் சினிமா.

தெற்கத்தி கலைக்கூடம் இப்படத்தை தயாரிக்கிறது. அர்ஜூனும், நானா படேகரும்இணைந்து நடிக்கிறார்கள். நானா நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதுதவிர புதுமுக நாயகனையும்,நாயகியையும் அறிமுகப்படுத்துகிறார் பாரதிராஜா.

படத்தின் பூஜை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அந்நாட்டு அமைச்சர் டத்தோசாமிவேலு முன்னிலையில் நடந்தது.

மலேசியா, சிங்கப்பூர், மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பைநடத்தவுள்ளார் பாரதிராஜா. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும்இப்படத்திற்கு இசையமைப்பவர் மும்பையைச் சேர்ந்த ஹிமேஷ் ரேஷ்மய்யா.

சமீபகாலமாக வி டிவி, எம் டிவி என எந்த இசை டிவியைப் போட்டாலும் கண்ணில்படுபவர் ரேஷ்மய்யா தான். சூப்பர் குரலில் தானே பாடி இசையும் அமைக்கும்டேலன்ட் கொண்டவர்.

பாடல்களை வழக்கம் போல வைரமுத்து எழுத, ஒளிப்பதிவு செய்கிறார்பாரதிராஜாவின் கண்களான கண்ணன்.

கலையை சாபு சிரில் கவனிக்கிறார்.

ஏற்கனவே இப்படம் குறித்து மும்பையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திப்பதிப்பான சினிமாவின் பல காட்சிகளை ஏற்கனவே பாரதிராஜா எடுத்து முடித்துவிட்டார்.

பாரதிராஜா சார்.. உங்க வீட்டு விருந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, சீக்கிரம்போடுங்க.

Read more about: bharathirajas bommalattam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil