»   »  கட் அடிச்சு எட்டடிக்கும் பாவனா

கட் அடிச்சு எட்டடிக்கும் பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஸ்ட்லியான காரை துட்டு போட்டு வாங்கி விட்ட பாவனா அந்தக் காரை எப்படி ஓட்டுவது என்றுஷூட்டிங்குக்கு மட்டம் போட்டு விட்டு கற்று வருகிறாராம்.

கிழக்குக் கடற்கரைச் சாலை படத்திற்காக கார் சேஸிங் சீனில் கார் ஓட்ட வேண்டும் என்று இயக்குநர் கூறியபோதுஇதற்காக கேரளாவுக்குப் போய் பத்து நாள் டிரைவிங் கற்றுக் கொண்டு வந்து நடித்துக் கொடுத்தார். இப்போதுசொந்தமாக ஒரு சூப்பர் வெளிநாட்டுக் காரை வாங்கியுள்ளார் பாவனா.

இந்தக் காரை இப்போதைக்கு கேரளாவில் உள்ள வீட்டில்தான் நிறுத்தி வைத்திருக்கிறாராம். காரை இப்போதுசென்னைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளார். கேரளாவில் சந்து சந்தாக புகுந்து ஓட்டிக் கொண்டு போய்விடலாம். சென்னையில்தான் ஜன சமுத்திரம் ஜாஸ்தியாச்சே!

இதனால் சென்னையில் காரோட்டுதற்கு முன்பு நன்றாக ஓட்டிப் பழகிக் கொள்ளத் திட்டமிட்டார் பாவ். ஆனால்சென்னையிலோ? டிரைவிங்கோ? வேண்டா மோளே என்று பாவனாவுக்கு பெற்றோர் தடா போட்டு விட்டனராம்.

இருந்தாலும் காராசை விடாத பாவனா, இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஷூட்டிங்கின்போது நைசாக கட்அடித்து விட்டு டிரைவிங் கற்று வருகிறாராம். சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள கார்களில் எதையாவது ஒன்றை எடுத்துக்கொண்டு யூனிட்டில் உள்ள யாரையாவது கூட்டிக் கொண்டு காருடன் கிளம்பிப்போய் வீட்டுக்குத் தெரியாமல்காரோட்டப் பழகி வருகிறாராம்.

பாவனாவுக்கு டிரைவிங் கற்றுத் தர யூனிட் டிரைவர்களிடையே போட்டா போட்டியாம். இதனால் ஒரு நாளைக்குஒருத்தர் என்று ஷிப்ட் போட்டு கற்றுக் கொடுத்து வருகிறார்களாம்.

எப்படியோ, ஏழரை ஏதும் வந்து விடாமல், நல்லபடியா எட்டு போட்டா போதும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil