»   »  பாவனாவின் கண்டிஷன்!

பாவனாவின் கண்டிஷன்!

Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி காட்டுவதில்லை என்ற முடிவில் படு தீர்மானமாக இருக்கிறார் பாவனா. எவ்வளவு கெஞ்சினாலும் கிளாமருக்கு மட்டும் ஸாரி சொல்லிவிடுகிறாராம்.

சித்திரம் பேசுதடிக்கு முன்பு மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தவர் பாவனா. சித்திரம் பேசுதடி சூப்பர் ஹிட் ஆனதால், கை நிறையப்படங்களில் தமிழில் பிசியாகி விட்டார் பாவ்.

இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்து வருபவர் பாவனா மட்டும்தானாம். கிராக்கி அதிகம் இருப்பதால் சம்பளத்தையும்சகட்டு மேனிக்கு ஏற்றி வருகிறாராம்.

தன்னைத் தேடி வரும் இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் பாவனா போடும் முதல் கண்டிஷனே கிளாமர் காட்ட மாட்டேன், கதை நன்றாகஇருக்க வேண்டும். இந்த இரண்டிலும் திருப்தியான பிறகே கால்ஷீட் கொடுக்கிறாராம்.

கோடி கொடுத்தாலும் டப்பா படங்களில் நடிக்க மாட்டேன், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று உறுதியாக கூறுகிறார் பாவனா. அவரிடமிருந்துகிளாமரை கறப்பதும், கல்லிலிருந்து நாரை உரிப்பதும் ஒன்றுதான் என்று அலுத்துக் கொள்கிறார்கள் கோலிவுட் அம்பிகள்.

சமீபத்தில் அவரை வைத்து படம் எடுக்கும் ஒரு இயக்குநரும், அப்படத்தின் தயாரிப்பாளரும், பாவனாவிடமிருந்து எப்படியாவது கிளாமரைபுடுங்கிப்புடணும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்த்துள்ளனர்.

கலர் கலரான காந்தி தாத்தாக்களையும் கண்ணில் காட்டிப் பார்த்துள்ளார்கள். ஆனாலும் பாவனா மசியவில்லையாம். வெறுத்துப்போன அவர்கள்போனால் போகட்டும் தொப்புளை மட்டுமாவது காட்டுங்களேன் என்று தொபுக்கடீர் என்று விழுந்து கேட்டுப் பார்த்துள்ளனர்.

அச்சச்சோ, அதெல்லாம் காட்டப்டாது என்று கடுப்பாகிப் போனாராம் பாவனா. இதனால் கிளாமரை விட்டு விட்டு சைவத்தனமாக பாவானசம்பந்தப்பட்ட காட்சிகளை சுட்டு வருகிறாராம் இயக்குநர்.

தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக கிளாமரைப் பிடுங்குவதிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என யோசித்த பாவனா, தொப்பையை கூட்டி விட்டால்,யாரும் நம்மிடம் கிளாமர் கேட்டு லொள்ளு பண்ண மாட்டார்கள் என முடிவு செய்து நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு உடம்பை ஏற்றஆரம்பித்துள்ளாராம்.

குறைக்கச் சொன்னா கூட்டுறாரே!?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil