»   »  ரவுடி பாவனா!

ரவுடி பாவனா!

Subscribe to Oneindia Tamil

ரவுடி வேடத்தில் பாவனா கலக்கியுள்ள ஆர்யா ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

மாதவன், பாவனா, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படம் ஆர்யா. பாலசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு படு மந்தமாக நடந்து வந்தது.காரணம் ஆரம்பத்திலிருந்தே மாதவன், பிரகாஷ் ராஜின் கால்ஷீட்டுகள் சரிவர கிடைக்காமல் படு சொதப்பலாகிப் போனதுதான்.

இதனால் தட்டுத் தடுமாறி படப்பிடிப்பை நடத்தி வந்த பாலசேகரன், கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டார். மாதவன்,பிரகாஷ் ராஜின் கால்ஷீட்டுகளை ஒரு சேர வாங்குவதற்குள் தாவு தீர்ந்து போய் விட்ட பாலசேகரன், ஒரு வழியாக அவர்களைப் பிடித்துஹைதாராபாத்துக்குப் போய் விட்டார்.

ஆனால் இப்போது பாவனாவின் கால்ஷீட் கிடைக்குமா என்பதில் சந்தேகம் வந்து விட்டது. தயங்கித் தயங்கி அவ>டம் கேட்டபோது, பேஷா என்றுகூறி உடனே ஹைதராபாத் பறந்து வந்தாராம்.

மற்ற படங்களை விட்டு விட்டு பாவனா, ஆர்யா படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து போனதற்கு செமத்தியான காரணம் இருக்கிறதாம்.படத்தில் ரவுடி வேடத்தில் வருகிறாராம் பாவனா. யாருமே இப்படி ஒரு கலக்கலான ரவுடி வேடத்தில் நடித்ததில்லை என்று கூறும் அளவுக்குபட்டையைக் கிளப்பியுள்ளாராம்.

இந்தப் படம் வந்தால் தனது மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயரும் என்பது பாவனாவின் கணிப்பு. எனவேதான் எல்லாம் கூடி வந்த வேளையில்தன்னால் படப்பிடிப்பு தாமதமாகி படம் வெளி வராமல் போய் விடக் கூடாதே என்பதற்காகத்தான் மற்ற படங்களையெல்லாம் விட்டு விட்டுஆர்யாவுக்காக ஹைதராபாத் பறந்தாராம்.

ஹைதராபாத்தில் வைத்து கிளைமாக்ஸை முடித்து விட்டு படத்தையும் முடித்து விட்டு வெற்றிகரமாக சென்னைக்குத் திரும்பியிருக்கிறதாம் ஆர்யாயூனிட்.

ஆறிப் போவதற்குள் ரசிகர்களுக்கு ப>மாறிடுங்கோ!

Read more about: bhavnamadhavans arya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil