»   »  கடலில் சிக்கிய பாவனா

கடலில் சிக்கிய பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தீபாவளி படத்தின் சூட்டிங்கின்போது நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை பாவானஉள்ளிட்ட படக் குழுவினர் நடுக் கடலில் சிக்கி 3 மணி நேரம் தத்தளித்தனர்.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உருவாகும் படம் தீபாவளி.வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தின்படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தில் ஜெயம் ரவியும், பாவனாவும் ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தின்கதைப்படி மீனவராக நடிக்கிறார் ஜெயம் ரவி. தனது காதலியான பாவனாவைகடலுக்குள் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுவது போன்ற ஒரு காட்சியை படமாக்கதிட்டமிட்டிருந்தனர்.

இதன் படப்பிடிப்பு ராயபுரம் அருகே நடுக் கடலில் நடந்தது. இதற்காக 4 படகுகளில்படக் குழுவினர் கடலுக்கு சென்றனர். அவர்களுக்கு உதவியாக சில மீனவர்களையும்அழைத்துச் சென்றிருந்தனர்.

2 நாட்களுக்கு முன்பு காலை 10 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்புவிறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. பிற்பகல் ஒன்றரை மணியளவில் திடீரெனகருமேகங்கள் சூழ மழை பெய்ய ஆரம்பித்தது. சாதாரணமாக பெய்யத் தொடங்கியமழை சில நிமிடங்களில் கன மழையாக மாறியது.

இதனால் படகில் இருந்த அத்தனை பேரும் தொப்பலாக நனைந்து விட்டார்கள். மேககூட்டம் மிகக் கடுமையாக இருந்ததால் அந்த பட்டப் பகலும், நள்ளிரவு போலஇருண்டு காணப்பட்டது. இதனால் படகில் இருந்தவர்கள் பயந்து போய் விட்டனர்.

அருகில் நிற்கும் படகு கூட தெரியாத அளவுக்கு கும்மிருட்டாக மாறியதாலும், மழைவெளுத்து வாங்கியதாலும் உயிர் பிழைப்போமா என்ற சந்தேகம் படக் குழுவினருக்குவந்து விட்டதாம்.

மறுபக்கம் கடல் அலைகள் வேறு தாறுமாறாக பொங்கத் தொடங்கின.கடல் இரைச்சல்,கன மழை, கும்மிருட்டு ஆகியவற்றால் பீதியில் மூழ்கிய படக் குழுவினர் உயிரைக்கையில் பிடித்தபடி நடுங்க ஆரம்பித்தனர். சிலருக்கு பயத்தில் வாந்தியும், மயக்கமும்ஏற்பட்டுவிட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் படக் குழுவினர் சுமார் 3 மணி நேரம் கடலில்தத்தளித்துள்ளனர். இப்படியே மாலை 4 மணி வரை உயிர் போராட்டம் நீடித்தது.அதன் பிறகுதான் மழை நின்று, மேகங்கள் கலைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது.

அப்புறம் என்ன, தப்பிச்சோம்டா சாமி என்று அலறியபடி அத்தனை படகுகளையும்கரைக்குத் திருப்பியுள்ளனர். கரை வந்து சேர்ந்த பிறகும் கூட பாவனாவுக்கு பயம்தெளியவில்லையாம்.

இந்த பயங்கர சம்பவத்தையடுத்து 2 நாட்களுக்கு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்களாம்.

3 மணி நேரத்திற்கே இவ்வளவு பயம்னா, வாழ்க்கை முச்சூடும் கடலுக்குள்ளேயேகழிக்கும் மீனவ மக்கள் நிலை எப்படியிருக்கும் சாமீ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil