»   »  'ரேப்' சீன் - பாவனா டென்ஷன்!!

'ரேப்' சீன் - பாவனா டென்ஷன்!!

Subscribe to Oneindia Tamil


கற்பழிப்புக் காட்சியைப் படமாக்கியபோது நிறையப் பேர் அந்த அரங்கத்தில் இருந்ததால் பாவனாவுக்கு ரொம்ப சங்கடமாகிப் போய் விட்டதாம்.

Click here for more images

அந்தக் காலத்து தமிழ் சினிமாப் படங்களில் கற்பழிப்புக் காட்சி கட்டாயம் இருக்கும். வில்லனை விட்ட நாயகியையேயா அல்லது நாயகனின் தங்கச்சியையோ கற்பழிக்க விடுவார்கள். ஆனால் போகப் போக இந்தக் கற்பழிப்புக் காட்சிகளின் மீதான மோகத்திலிருந்து சினிமாக்காரர்கள் விடுபட்டார்கள். அதற்குப் பதிலாக குத்துப் பாட்டுக்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கற்பழிப்புக் காட்சிகள் தமிழ் சினிமாவுக்குத் திரும்பி வர ஆரம்பித்திருக்கின்றன. நேபாளி, பழனி ஆகிய படங்களில் விறுவிறுப்பான கற்பழிப்புக் காட்சிகளை வைத்துள்ளனர்.

நேபாளி படத்தில் மீரா ஜாஸ்மினை வில்லன் கற்பழிக்கிறார். பழனியில் ஹீரோவின் தங்கச்சியை வில்லன் கற்பழிக்கிறாராம்.

சமீபத்தில் தெலுங்கில் உருவாகும் ஒண்டரி என்ற படத்துக்காக ஒரு கற்பழிப்புக் காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் 'கற்பழிக்கப்பட்டவர்' பாவனா, 'கற்பழித்தவர்' ஆசிஷ் வித்யார்த்தி. இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி வெளிவரவுள்ளது.

வாழ்த்துக்கள் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கை சென்றிருந்த பாவனா, ஒண்டரி படத்தில் நடிப்பதற்காக விசாகப்பட்டனம் சென்றார். அங்குதான் இந்த கற்பழிப்புக் காட்சியைப் படமாக்கினர்.

காட்சிப் படி, உள்ளூர் எம்.எல்.ஏவின் அடியாட்கள், கடற்கரையில் பாவனாவைத் துரத்துகின்றனர். பின்னர் அங்கு கற்பழிப்புக் காட்சி அரங்கேறுகிறது.

இந்தக் காட்சியை விசாகப்பட்டனம் கடற்கரையில் படமாக்கியபோது அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டதாம். உள்ளூர் ஆட்கள் அனைவரும்
பாவனா கற்பழிக்கப்படும் அழகை ரசிக்கக் கூடியுள்ளனர்.

படப்பிடிப்பை ஜஸ்ட் பார்த்து ரசித்ததோடு நில்லாமல், கூடவே குண்டக்க மண்டக்க கமெண்ட்டும் அடித்துள்ளனர். இதைக் கேட்டதும் பாவனாவுக்கு பெரும் அப்செட் ஆகி விட்டதாம். தொடர்ந்து நடிக்க முடியாது என்று அடம் பிடித்துள்ளார்.

இதையடுத்து கூட்டத்தினரை படப்பிடிப்புக் குழுவினர் கலைந்து தூரமாகப் போகக் கூறி, அதன் பிறகு கற்பழிப்புக் காட்சியை படமாக்கியுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, தூர வைத்த பின்னர்தான் கற்பழிப்புக் காட்சியில் முழு ஈடுபாட்டோடு நடித்தாராம் பாவனா.

இந்தக் கற்பழிப்புக் காட்சி குறித்து பின்னர் பாவனா கூறுகையில், கற்பழிப்பை விட அந்தக் கூட்டத்தினர் அடித்த காமெண்டுகள்தான் படு மோசம் என்றார்.

Read more about: bhavana, rape seen, tension
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil