»   »  குப் குப் பூமிகா!

குப் குப் பூமிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூமிகா என்ற அம்சமான அப்ஸரஸ் தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது வந்து செல்லும் நிலையில்,அப்பாடியோவ் என்று மலைக்க வைக்கும் அளவுக்கு பூமிகா என்ற மாடல் அழகி தமிழ் ரசிகர்களைகொள்ளையடிக்க வருகிறார்.

அந்த பூமிகா கெச்சலாக இருக்கிறார், ஆனால் இந்த பூமிகாவோ, பூமியையே தடதடக்க வைக்கும் அளவுக்கு படுதளதளப்பாக இருக்கிறார்.

விஜேயந்திரா புரொடக்ஷன்ஸ் தயா>ப்பில் உருவாகும் தொடக்கம் என்ற படத்தில்தான் இந்த குப் குப் பூமிகாதிறமை காட்டுகிறார். நாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டும் ஆடப் போகிறார்.

மணிவண்ணனின் மகன் ரகு வண்ணன்தான் படத்தின் ஹீரோ. அபிநய் இன்னொரு நாயகன். இம்சை அரசனில்வடிவேலுவுடன் ஜோடி போட்ட மோனிகா ஒரு நாயகியாக வருகிறார். மேகா இன்னொரு ஹீரோயின்.

முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரகுவரன் வித்தியாசமான வேடத்தில், அதாவதுவிஞ்ஞானியாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்துக்காக ஒரு குத்துப் பாட்டை கோவாவில் வைத்து சுட்டார்கள்.

இந்தப் பாட்டுக்குத்தான் நம்ம பூமிகா அந்தராட்டம் ஆடி அசத்தினார். மும்பையில் பிரபல மாடலாம் பூமிகா.ஆட்டம், பாட்டத்தில் பின்னி எடுத்துவாராம். அவரது திறமைகளை அறிந்ததும் கூட்டி வந்து ஆட விட்டுள்ளனர்.

பூமிகா ஆடிய ஆட்டத்துக்கு தேன்மொழி எழுதிய ஆதாமின் ஆப்பிள் பெண்ணும் நீதானா என்ற பாட்டு படுஅமர்க்களமாக இருந்தது, படப்பிடிப்பு நடந்த இடமோ அதகளப்பட்டது.

இந்த ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டு முடிப்பதற்குள் பல பாக்கெட் தம்மை ஊதித் தள்ளிவிட்டாராம் பூமிகா.அந்த அளவுக்கு ஒவ்வொரு ஷாட் முடிவிலும் ஒரு குப்!.

பூமி தாங்காது, ஆத்தா!

Read more about: model bhoomika in tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil