ஒத்தைக்கு ரெடியாகும் பூமிகா
பூ போல நடித்து அனைவரையும் கவர்ந்த பூமிகா இப்போது குத்தாட்ட நாயகியாக களம் இறங்குகிறார்.
தமிழ் ரோஜா கூட்டம் மூலம் அறிமுகமானவர் பூமிகா. இதில் இயல்பாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதன் பின்பு விஜய்யுடன் பத்ரி படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவரது நேரம் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் துவண்டு போன பூமிகா இந்திக்கு போனார்.
அங்கு ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்குக்கு போனார். அங்கு அவருக்கு ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்றனர் தெலுங்கு படவுலகினர்.
இதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பின்பு சூர்யாவுடன் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க வந்தார். இதில் தனது நடிப்பு திறமையை இயல்பாக வெளிப்படுத்தினார்.
இப்போது இயக்குனர் ராஜ்கபூர் இயக்கி வரும் வம்பு சண்ட படத்தில் ஒத்த பாட்டுக்கு ஆட வருகிறார் பூமிகா.
இதில் ஹீரோயினாக நடிப்பது விரைவில் கல்யாணம் ஆகப் போகும் தியா.
இந்த படத்திற்காக தமிழ் சினிமாவில் முதன் முறையாக சத்யராஜ் கேரளாவின் பாரம்பரியக் கலையான கதகளி நடனக் கலைஞர் வேடத்தில் ஒரு காட்சியில் வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
கதகளிய களியாட்டம் ஆக்கிறாதீங்க.. சத்யராஜ் சார்...


Click it and Unblock the Notifications











