சூட்டிங் ஸ்பாட்
டிவியில் படு பிஸியாக உள்ள புவனேஸ்வரி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
விபச்சார வழக்கில் பிடிபட்டு பரபரப்பான புவனேஸ்வரியை ஷங்கர் தனது பாய்ஸ் படத்தில் நடிக்க வைத்தாார்.அதிலும் விபச்சாரி வேடத்தில் நடித்தார்.
படத்தின் பெயர் கன்னி நிலா (அட !). இதில் ஈரநிலம் நந்திதா தான் ஹீரோயின். ஹீரோ ரவிராகுல்.
இவர் சில படங்களில் தலைகாட்டியவர் தான்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதில் ஹீரோ, ஹீரோயினைவிட இதில் நடிக்கும் புவனேஸ்வரிக்குத் தான்ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.
இவரோடு இன்னொரு டிவி-கம்- சினிமா நடிகை நளினியும் இந்தப் படத்தில்நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் நான்கு படங்களில் தயாராகிறதாம் இந்த கிராபிக்ஸ் பேய் படம்.
நம்மவர்களைப் பொறுத்தவரைபேய் படம் என்றாலே கவர்ச்சி தானே.
இதனால் புவனேஸ்வரியை இழுத்துப் போட்டிருக்கிறார்கள்.
புவனேஸ்வரிஇந்த வேடத்தில் கச்சிதமாய் பொருந்துவாராம்.


Click it and Unblock the Notifications











