இந்தியன் 2 செட்டில் பிறந்தநாளை கொண்டாடிய பாபி சிம்ஹா

Recommended Video

Indian 2 Shooting Spot:நடிகை காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்கிறார்

பாபி சிம்ஹா 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பல சிறந்த கலைஞர்களில் இவரும் ஒருவர். ஆரம்ப காலகட்டத்தில் பல குறும் படங்களில் நடித்திருப்பார் பாபி . அதற்கு பிறகு சினிமாவில் அறிமுகமாகி சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பாபி சிம்கா.

அதற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி அடைந்த 'ஜிகர்தண்டா' பட வில்லனாக நடித்து அசத்தினார் பாபி. அப்போதில் இருந்து அசால்ட் சேது என்றே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றும் அறியபடுபவர் பாபி சிம்ஹா . அந்த படத்தில் பாபி வெளிப்படுத்திய சிறந்த நடிப்பிற்காக சிறந்த துணை நடிகர்கான தேசிய விருது கிடைத்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் அதர்வாவை வைத்து ரீமேக் செய்யபட்டு வருகிறது.

Bobby simha celebrates his birthday today

அதற்கு பிறகு பல படங்களில் சோலோ ஹுரோவாகவே நடித்தார் பாபி. உருமீன் ,கோ 2,பாம்பு சட்டை , திருட்டு பயலே 2 என சில படங்களில் ஹுரோவாக நடித்தார். அதே சமயத்தில் வில்லனாக கருப்பன், சாமி 2 படங்களில் நடித்திருந்தார். ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் பாபி.

வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என எந்த கதாபாத்திரமானாலும் தன்னுடைய 100 % நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர் பாபி சிம்ஹா.

Bobby simha celebrates his birthday today

தற்போது பாபி சிம்ஹா விடுதலை புலிகளின் தலைவர் 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' வாழ்க்கை வரலாற்றில் பிரபாகரனாக நடிக்க இருக்கிறார். அதன் பிறகு வல்லவனுக்கு வல்லவன் எனும் படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாபியின் பிறந்த நாளன்று நவம்பர் 6 ம் தேதியான நேற்று இவர் பிறந்த நாளை தனது இந்தியன் 2 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பாபி சிம்ஹாவுடன் இயக்குனர் ஷங்கர் , நடிகர் விவேக், ஸ்டென்ட் மாஸ்டர்'பீட்டர் ஹெயின் மற்றும் சிலரும் உடனிருந்தனர்.

Bobby simha celebrates his birthday today

பாபி சிம்ஹா பிறந்த நாள் மிக சந்தோஷமாக இந்தியன் 2 செட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. பாபி சிம்ஹா வாழ்வில் இந்த பிறந்த நாள் ஒரு மறக்க முடியாத ஒரு தருணமாக இருக்கும்.

இவர் நடிப்பில் சூதுகவ்வும், பீட்சா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் ஆரம்பகாலங்களில் கிடைத்த வாய்ப்புகள். அவற்றையும் பாபி மிகவும் சிரமம் எடுத்து உழைத்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம். பாபி சிம்ஹாவிற்கு பில்மி பீட் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Bobby simha celebrates his birthday today

இந்தியன் 2 படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. இது நிச்சயம் இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தை விட ஒரு படி மேலே இருக்கும். இயக்குனர் ஷங்கர் - கமல்ஹாசன் காம்போ என்றல் சும்மாவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X