வலிமை ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்ட போனி கபூர்... அப்டேட் கேட்டு நச்சரிக்கும் ரசிகர்கள்

சென்னை : அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவரின் 60 வது படமான வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் டைரக்டர் ஹச்.வினோத் தான் இயக்கி உள்ளார். அஜித், ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணியே அஜித் 61 படத்திலும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வரைவில் இந்த படத்தின் பணிகள் துவங்கப்பட உள்ளது.

அஜித் நடித்து முடித்துள்ள வலிமை படம் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என போனி கபூர் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஜனவரி 12 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங்கள் கூட நடைபெற்று வருகிறது.

1.8 மில்லியன் லைக்

1.8 மில்லியன் லைக்

Book my show ல அதிகம் லைக் செய்யப்பட்ட படமாக வலிமை இருந்து வருகிறது. இதுவரை வலிமை படத்திற்கு இந்த ஆப்பில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது. இதனை போனி கபூரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செம ஹிட்டான பாடல்

செம ஹிட்டான பாடல்

ஜுலை மாதத்தில் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவன் எழுதிய நாங்க வேற மாரி பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் செகண்ட் சிங்கிளாக அம்மா பாடல் வெளியிடப்பட்டது. இதையும் விக்னேஷ் சிவன் தான் எழுதி இருந்தார். இந்த பாடலும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது.

நாளை டிரைலர் ரிலீசா

நாளை டிரைலர் ரிலீசா

வலிமை படத்தின் டிரைலர் டிசம்பர் 14 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக ஏற்கனவே சோஷியல் மீடியாக்களில் பல நாட்களாக தகவல் பரவி வருகிறது. விரைவில் வலிமை டிரைலர் வர உள்ளதாக பல உறுதியான தகவல்களும் கூறி வருகின்றன. இதனால் வலிமை அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

போனி கபூரின் த்ரோபேக் ஃபோட்டோ

போனி கபூரின் த்ரோபேக் ஃபோட்டோ

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த போனி கபூர், தான் சோலோவாக இருக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக பிளாக் அண்ட் ஒயிட் த்ரோ பேக் ஃபோட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வந்தார்.

போனி கபூர் வெளியிட்ட வீடியோ

போனி கபூர் வெளியிட்ட வீடியோ

இன்று திடீரென வலிமை படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை போனி கபூர் இன்ஸ்டிராகிராமில் வெளியிட்டுள்ளார். இதில் நடுங்கும் குளிரில் கையை கட்டிக் கொண்டு அஜித்தும், போனி கபூரும் ஷுட்டிங் பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் கருப்பு உடையில் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவுடன், கடந்த ஆண்டு இதே நாள் நடுங்கும் குளிரில் ஐதராபாத்தில் வலிமை ஷுட்டிங்கில் அஜித்தும் நானும் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Valimai Villain திருமணத்திற்கு சென்ற Thala Ajith | Karthikeya weds Lohitha | Chiranjeeve
அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

இதற்கு லைக்குகளை குவித்து வரும் ரசிகர்கள் நாளைக்கு வலிமை டிரைலர் வருமா, அப்டேட் கொடுங்க, இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு சீக்கிரம் வலிமை அப்டேட் கொடுங்க, டிரைலர் வெளியிடுங்க என கேட்டு வருகின்றனர். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு இதுவரை ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பிக்கல. இது போல நிறைய வீடியோ வெளியிடுங்க என இரண்டு விநாடி வீடியோவிற்கு கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X