அஷ்‌மி‌தா‌வின் 'வி‌ல்‌லா‌ளன்'

By Chakra

Cantonment Shanmugam turns film producer
திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், முதல் படமான வில்லாளனில், வெற்றி- சூரியனை இயக்குநர்களாக அறிமுகப்படுத்துகிறார். இவர்களில் வெற்றி எனும் வெற்றிவேல், சண்முகத்தின் மகன். இவர்தான் படத்தின் நாயகனும்.

அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ என இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்கியுள்ளனர். கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பாளராக பணியாற்றியுள்ளார் ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசை அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு ஜி பாலன்.

‌படம்‌ பற்‌றி‌ இயக்‌குநரும்‌ கதா‌நா‌யகனுமா‌ன‌ வெ‌ற்‌றிவே‌ல்‌ கூறுகை‌யி‌ல்‌:

'வி‌ல்‌லா‌ளன்"‌ படம்‌ முழுக்‌க முழுக்‌க போ‌லீ‌ஸ்‌ கதை. நமது வா‌ழ்‌கை‌யி‌ல்‌‌, நம்‌மை‌ச் சுற்‌றி‌ நடக்‌கும்‌‌ சம்‌பவங்‌களை‌ எதி‌ர்‌கொ‌ள்ளும்‌ ஒரு போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌. அதை, சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌மல்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

மகா‌பா‌ரதத்‌தி‌ல் வரும்‌ அர்‌ஜூ‌னனுக்‌கு இன்‌னொ‌ரு பெ‌யர்‌ தா‌ன்‌ வி‌ல்‌லா‌ளன்‌. அந்‌த அர்‌ஜூ‌னன்‌ எவ்‌வளவு‌ சக்தி மிக்கவனோ, அதற்கு நிகரான ஒருவன்தான் இந்தப் பட நாயகன் ரத்னவேல். பாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகர்கள் வேண்டும் என்பதால் பிரபல நடிகர்களைப் போடாமல், புதுமுகங்களை நடிக்க வைத்துள்ளோம்..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X