For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  துபாயிலிருந்து கோலிவுட்டுக்கு...

  By Staff
  |

  துபாயில் விமானப் பணிப் பெண்ணாக இருந்தவர் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்.

  கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் பெயர் சென்னை 600028. எஸ்பிபாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் தான் படத்தின் தயாரிப்பாளர்.

  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் மற்றும் தந்திரா பிலிம்ஸ் என்ற நிறுவனங்களின் சார்பில் படத்தை எடுக்கிறார் சரண்.

  படத்தில் மொத்தம் 11 ஹீரோக்களாம். ஹீரோயின்கள் 2 பேர். அதில் ஒருவர் இயக்குனர் அகத்தியனின் மகள்விஜயலட்சுமி. இன்னொரு ஹீரோயின் தான் நாம் சொன்ன ஏர்-ஹோஸ்டர் கேத்தரின் ஜாடக்.

  துபாயில் தனியார் விமான நிறுவனத்தில் ஏர்-ஹோஸ்டஸ் வேலையில் ஜாலியாக இருந்தவர் விடுமுறையில்மும்பையில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வந்திருக்கிறார்.

  வந்த இடத்தில் மாடலிங் செய்ய வர்றீங்களா என்று சிலர் இவருக்கு தூண்டில் போட, சும்மா தானே இருக்கோம்என்று சும்மா தலையை ஆட்டியிருக்கிறார்.

  இதையடுத்து இவரது ஸ்டில்கள் எடுக்கப்பட்டு மீடியேட்டர்களின் கைகளில் தரப்பட, அந்த நேரத்தில் ஹீரோயின்தேடி மும்பைக்குப் போன சரண்-வெங்கட் பிரபுவின் கையில் கேத்தரின் போட்டோ வந்து சிக்கியுள்ளது.

  உடனடியாக பெண்ணின் முகவரியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் இறங்கி சினிமாவில் நடிக்கவிருப்பமா என்று கேட்டுள்ளனர். பிளேன் இல்லாமலேயே விண்ணில் பறக்கும் ஆனந்த பரவசம் அடைந்தகிரிஸ்டினா சம்பளம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தலையை ஆட்டிவிட்டாாரம்.

  அடுத்த பிளைட்டிலேயே சென்னைக்குக் கூட்டி வந்துவிட்டார்கள்.

  இப்போது பாங்காக்கில் சூட்டிங் விறுவிறுவென நடந்து கொண்டிருக்க, படத்துக்கான பாடல்களை கம்போஸ்செய்யும் வேலையில் பிஸியாய் இருக்கிறார் வெங்கட் பிரபுவின் பெரியப்பா இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா.

  இந்தப் படம் ஒரு ரொமான்டிக் காமெடி என்கிறார் வெங்கட் பிரபு.

  சென்னை-600028 என்று போஸ்ட் மேன் மாதிரி பின்கோட் பெயரை வைத்திருக்கிறீர்களே? என்று கேட்டால்,

  சென்னை 28ல் இருக்கும் மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் பகுதிக்குள் நடக்கும் கதை தான் படமே. அதனால் அதையேடைட்டிலாக்கிவிட்டோம். நான் வளர்ந்ததும் கூட இந்த ஏரியாக்களில் தான். நான் பார்த்ததைத் தான் படத்தில்சொல்லப் போகிறேன்.

  லண்டன்ல போய் படிச்சிட்டு ஏன் சினிமா.. சினிமான்னு அலையுறீங்க?

  உங்களுக்கு கதை தெரியாதா. என்னால சினிமா இல்லாம இருக்க முடியாது. லண்டன்ல படிக்கப் போன இடத்துலகூட ஒரு தியேட்டர்ல தான் பார்ட் டைம் வேலைக்கு சேர்ந்தேன். தினமும் 2 சினிமா பார்ப்பேன்.

  சென்னையில் இருந்தால் ஏதாவது ஒரு சூட்டிங் ஸ்பாட்ல போய் நின்னுருவேன். ஸ்பாட்ல யாராவது கிடைச்சாபோதும் கதை, காட்சிகளை எல்லாம் சொல்லி அவங்களை படாதபாடு படுத்திடுவேன். சினிமா என் உயிர் சார்என்றார்.

  பி.கு:

  நீண்ட நாட்களுக்குப் பின் இந்தப் படத்துக்காக வெங்கட்டின் அப்பா கங்கை அமரன் ஒரு கானா பாடலைஎழுதியிருக்கிறாராம்.

   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X