»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மஞ்சுளா விஜயகுமார் தம்பதியின் குழந்தைச் செல்வங்கள் அனைத்தும் நடிப்பில் இறக்கி ஒரு குட்டி நடிப்பு கல்லூரியையே நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் வீட்டில் நடிக்காத ஆளே இப்போது இல்லை. குடும்ப சகிதம் நடிப்பில் திறமை காட்டி வருகிறார்கள்.

இவர்களில் பலரின் திறமை ஒன்றிரண்டு படங்களோடு நின்றுபோய் விட்டது. அவர்களின் திறமைகள் ரசிகர்களுக்குப் புரிந்து விடுதாலோ அல்லது கசந்துவிடுவதாலோ அடுத்து படவாய்ப்புகள் இவர்களுக்கு வருவதில்லை. ஆனாலும் அந்தத் தம்பதிகள் தங்கள் ஒவ்வொரு அஸ்திரத்தையும் வரிசையாக விட்டு சினிபீல்டை பதம் பார்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் கடைசி அம்புதான் தம்பதிகளின் ஷேஷ்ட குமாரி ஸ்ரீதேவி. இவர் கதிரின் காதல் வைரஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பதுஅர்தப் பழைய சேதி.

புது செய்தி, அல்லி அர்ஜூனா படத்தில் மஞ்சுளாவின் புத்திரி ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடவிருப்பதுதான். அமர்க்களம்டைரக்டர் சரண் இயக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடவுள்ளார் ஸ்ரீதேவி.

Please Wait while comments are loading...