»   »  சிக்னலில் 'சிலம்பிய' சார்மி!

சிக்னலில் 'சிலம்பிய' சார்மி!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
புல்லட் பின்னால் ஹீரோவை உட்கார வைத்துக் கொண்டு சீறிப் பாய்ந்த சார்மி, சிக்னலில் ஒரு வண்டிக்காரர் மீது மோதி விட, அந்த வண்டிக்காரர் சார்மியிடம் சண்டை பிடிக்க, பதிலுக்கு சார்மியும் வாயை விட, ஒரே களேபரமாகி விட்டதாம்.

காதல் அழிவதில்லை மூலம் நடிக்க வந்தவர் சார்மி. ஆஹா என்ன அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் சார்மி.

வந்த புதிதில் அழகுப் பொம்மையாக இருந்த சார்மி இப்போது தெலுங்கில் கிளாமர் கில்லி. கிளாமரை அள்ளி வழங்குவதில், சார்மி கொஞ்சம் கூட வஞ்சமே செய்வதில்லையாம். இயக்குநர் எதிர்பார்ப்பதை விட தாராளமாக அள்ளி வழங்குவதால் சார்மி காட்டில் இன்னும் தெலுங்கில் நல்ல மழையாம்.

தனி நாயகியாகவும், சிங்கிள் பீஸ் ஆட்டத்திலும் தெலுங்கில் பிய்த்து உதறிக் கொண்டிருக்கும் சார்மி, இப்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். லாடம் என்ற படத்தில் சார்மிதான் நாயகி. கொக்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன்தான் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் சார்மிக்கு ஜோடியாக அரவிந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

சென்னை கோயம்பேட்டில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. காட்சிப்படி, சார்மி, புல்லட் வண்டியை ஓட்ட, அவருக்குப் பின்னால் ஹீரோ அரவிந்த் அமர்ந்து கொள்ள படு வேகமாக வண்டியை ஓட்டுவது போல காட்சியாம்.

சார்மி தானே புல்லட்டை ஓட்டுவதாக கூறி ஜாலியாக ஹெல்மட்டைப் போட்டுக் கொண்டு குஷாலாக ஏறி அமர்ந்து கிக்கரை உதைத்து புயலெனக் கிளப்பியுள்ளார்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பிய புல்லட், சீறிப் பாய்ந்து ஓடியது. அந்தக் காட்சியை கேமராமேன் இன்னொரு பைக்கில் அமர்ந்தபடி படம் பிடித்துக் கொண்டு வந்தார்.

அப்போது ஒரு போக்குவரத்து சிக்னலில் சார்மி திரும்ப, அங்கிருந்த வந்த ஒரு பைக் காரர் மீது வண்டி லேசாக உரசி விட்டது. இதனால் கடுப்பான அந்த நபர், புல்லட்டை ஓட்டி வருவது சார்மி என்று தெரியாமல் சத்தம் போட்டு சண்டையை ஆரம்பித்தார்.

அக்மார்க் மெட்ராஸ் கெட்ட வார்த்தைகளை எடுத்து சரமாரியாக விட்டார். அதைக் கேட்டதும் கடுப்பாகிப் போன சார்மி, வண்டியை விட்டு கீழிறங்கி அவரும் பதில் சண்டையில் குதித்தார்.

இதைப் பார்த்ததும் அங்கு கூட்டம் கூடி விட்டது. நிலைமை மோசமாவதைப் பார்த்த இயக்குநரும், கேமராமேனும் ஓடி வந்து உண்மையைச் சொல்லி பைக் காரரை அனுப்பி வைத்தனர். அப்புறம்தான் வண்டியை ஓட்டி வந்த அழகுப் புயல் சார்மி என தெரிய வந்து அனைவரும் சிரித்தபடி அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

Read more about: charmi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil