twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவளம் பீச்சில் மணிரத்னம் படக்குழு இப்படியா செய்யும்?: தன்னார்வலர்கள் கோபம்

    By Siva
    |

    Recommended Video

    கோவளம் பீச்சில் செக்க சிவந்த வானம் படக்குழு செய்த வேலை- வீடியோ

    சென்னை: கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு நடத்திய செக்கச் சிவந்த வானம் குழு கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை போட்டுவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் செச்கச் சிவந்த வானம்.

    கடந்த வாரம் படப்பிடிப்பு கோவளம் கடற்கரையில் நடந்துள்ளது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

    படப்பிடிப்பு

    படப்பிடிப்பு

    கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஏப்ரல் 24ம் தேதி படக்குழு அங்கிருந்து கிளம்பியுள்ளது. மறுநாள் காலை கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கு கிடந்த கண்ணாடித் துண்டுகள், கூர்மையான பொருட்கள் என்று குவிந்து கிடந்த குப்பையால் அதிர்ச்சி அடைந்தனர்.

    காயம்

    காயம்

    கடற்கரையில் கிடந்த கண்ணாடி துண்டுகளை தன்னார்வலர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது மூன்று பேரின் கையில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையை சுத்தம் செய்யுமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸிடம் கூறியபோது ஆட்களை அனுப்புகிறோம் என்றார்களே தவிர தேதி குறிப்பிடவில்லை என்று அப்பகுதியை சுத்தம் செய்த வழக்கறிஞர் சவுகத் ஜமால் தெரிவித்துள்ளார்.

    முருகதாஸ்

    முருகதாஸ்

    படக்குழு போட்டுச் சென்ற குப்பையை பிறர் சுத்தம் செய்வது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஏ.ஆர். முருகதாஸின் படக்குழு பிளாஸ்டிக் உள்ளிட்ட செட் பொருட்களை போட்டுச் சென்றது. மரக் கப்பலின் ஒரு பகுதியை படக்குழு விட்டுச் சென்றது. அதை நாங்கள் தான் அப்புறப்படுத்தினோம் என்கிறார் சவுகத்.

    படக்குழு

    நாங்கள் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் அங்கிருந்து கிளம்பும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவோம். கோவளம் கடற்கரையையும் சுத்தம் செய்துவிட்டு தான் வந்தோம். எங்கள் குழுவை சேர்ந்த 20 பேர் சுத்தம் செய்தனர். கண்ணாடித் துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று மெட்ராஸ் டாக்கீஸின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    English summary
    People of Kovalam has accused Mani Ratnam and his Chekka Chivantha Vaanam team of littering Kovalam beach after shooting some scenes there.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X