'ராஜாவுக்கு செக்' வைக்கும் சேரன்.. இறுதிக்கட்டத்தில் ஷூட்டிங்!
Recommended Video

சென்னை : சில வருடங்களாக நடிப்பில் இறங்காமல் இருந்துவந்த நடிகர் சேரன், தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 'ராஜாவுக்கு செக்' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சேரன் கடைசியாக 'மூன்று பேர் மூன்று காதல்', 'கதை திரைக்கதை இயக்கம் வசனம்' ஆகிய படங்களில் நடித்தார். தயாரிப்பாளராக சில படங்களையும் தயாரித்திருக்கும் சேரன் திருட்டு வி.சி.டி ஒழிப்பிற்காக புது முயற்சி ஒன்றை எடுத்தார்.

வி.சி.டி.க்கு பதிலாக, நேரடியாக சேட்டிலைட் டிஷ் மூலம் டிவியில் பார்க்கும் வகையில் 'C2H'' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை வெளியிட்டார். சேரனின் இந்தப் புதிய முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில், மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் எனும் இயக்குநரின் 'ராஜாவுக்கு செக்' எனும் படத்தில் நடிக்கிறார் சேரன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
'ராஜாவுக்கு செக்' படத்தில் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். சேரன் தற்போது 'ராஜாதி ராஜா' எனும் படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications