twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்க்ரீன்ல முறைச்சிக்கிட்டு.. நேர்ல சிரிச்சிக்கிட்டு.. வெறித்தனமாக முடிந்த மகான் டப்பிங்!

    |

    சென்னை: சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள மகான் படத்தின் டப்பிங் பணி நிறைவடைந்துள்ளது.

    ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மகான்.

    படப்பிடிப்பு முன்னதாக நிறைவடைந்த நிலையில், தற்போது டப்பிங் பணியும் நிறைவடைந்துள்ளது என கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் போட்டுள்ளார்.

    ஆரம்பமானது விக்ரமின் சியான் 61...வெளியான மாஸ் அப்டேட் ஆரம்பமானது விக்ரமின் சியான் 61...வெளியான மாஸ் அப்டேட்

    மாஸ் காட்டும் மகான்

    மாஸ் காட்டும் மகான்

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா மற்றும் மகன் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நேருக்கு நேர் மோதும் படமாக மகான் உருவாகி இருப்பது நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டப்பிங் ஓவர்

    டப்பிங் ஓவர்

    மகான் படத்தின் டப்பிங் பணியும் நிறைவடைந்துள்ளது என விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து பேசும் கிளைமேக்ஸ் காட்சியின் புகைப்படத்தை ஷேர் செய்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட் சியான் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிரிச்சிக்கிட்டும் முறைச்சிக்கிட்டும்

    சிரிச்சிக்கிட்டும் முறைச்சிக்கிட்டும்

    ஸ்க்ரீனில் மகான் மற்றும் தாதா முறைச்சிக்கிட்டும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஸ்டூடியோவில் குரல் கொடுத்து முடித்த தந்தையும் மகனும் செம ஹேப்பியாக சிரிச்சிக்கிட்டும் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் வால் பேப்பர் மற்றும் வாட்ஸப் டிபி மெட்டீரியலாக மாறி உள்ளது.

    ஒடிடியா? தியேட்டரிலா?

    ஒடிடியா? தியேட்டரிலா?

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், மகான் திரைப்படம் ஒடிடி ரிலீஸா? அல்லது தியேட்டர் ரிலீஸா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சியான் விக்ரம் ரசிகர்கள் படத்தை நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    கம்பேக் கட்டாயம்

    கம்பேக் கட்டாயம்

    சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் மகான் திரைப்படம் நிச்சயம் மிரட்டலாக இருக்கும் என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என மூவருக்குமே தோல்வியில் இருந்து மீண்டு வர இந்த படம் நிச்சயம் ஒரு நல்ல கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    English summary
    Chiyaan Vikram and Dhruv Vikram’s Mahaan movie dubbing completed. Director Karthik Subbaraj shares the dubbing studio picture in his twitter handle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X