சூட்டிங் ஸ்பாட்

By Staff

காணாமலே போய் விட்டார்கள் கவுண்டமணியும், செந்திலும். வருடத்திற்கு 30 படங்கள் வரை நடித்து வந்த இந்தஜோடி கடந்த ஆண்டில் தலா 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளது. அதிலும் பல படங்களில் இவர்களது காமடிபேசப்படவில்லை.

தமிழில் சினிமாவின் சிறந்த காமடி நடிகர்கள் வரிசையில் இந்த ஜோடிக்கு பெரிய இடமே உண்டு. ஆனால்கவுண்டமணியும், செந்திலும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன.

விவேக்கும், வடிவேலும் இவர்களது மார்க்கெட்டை பிடித்து விட்டார்கள்.

கடந்த ஆண்டில் கவுண்டமணி நடித்து ஆறு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதில் சமுத்திரம், குங்குமபொட்டுக் கவுண்டர் ஆகிய படங்களில் மட்டுமே கவுண்டமணியின் நகைச்சுவை எடுபட்டுள்ளது. செந்திலுக்கும்இதே நிலைதான்.

வழக்கம் போல விவேக்கும், வடிவேலுவும்தான் கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர்கள். அதில்விவேக்தான் நம்பர் ஒன் காமடியனாக இருக்கிறார். 21 படங்களில் நடித்துள்ள விவேக், அத்தனை படங்களிலும்அசத்தியுள்ளார்.

வடிவேலு 19 படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க படங்கள் பிரண்ட்ஸ், என் புருஷன் குழந்தை மாதிரி,மனதைத் திருடி விட்டாய் (இந்தப் படத்தில் ஒரு ஆங்கிலப் பாடலை அடிக்கடி பாடுவாரே, அட, அட!).

இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மணிவண்ணன். ஆச்சரியம்தான். சத்தமே போடாமல் 14 படங்களில்நடித்துள்ளார். இதில் ஆண்டான் அடிமையை அவரே இயக்கியும் உள்ளார்.

கடந்த ஆண்டின் அட்டகாச காமடிக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களாக தெனாலி, மின்னலே, உள்ளம்கொள்ளை போகுதே, டும்டும்டும், மிடில் கிளாஸ் மாதவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சூப்பர் குடும்பம், மனதைத்திருடி விட்டாய், பிரண்ட்ஸ், லூட்டி, என் புருஷன் குழந்தை மாதிரி ஆகிய படங்களைச் சொல்லலாம்.

வரும் காலத்திலும் விவேக்-வடிவேலு கொட்டம் தொடரட்டும்.-

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X