»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

நீங்கள் இலங்கைத் தமிழ் பெண்ணா? கமல் படத்தில் நடிக்க வாய்ப்பு காத்திருக்கிறது.

கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இலங்கைத் தமிழ் பெண் தேவை என்று விளம்பரம்செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைக் கதைக் களமாகக் கொண்டு மாதவனின் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் இலங்கைத் தமிழ்பேசத் தெரிந்த ஒரு நடிகை தேவைப்படுகிறார்.

இப்போதுள்ள தமிழ் நடிகைகள் பலரையும் முயற்சி செய்து பார்த்தும் யாரும் தேறாததால் இப்போது புதிய நாயகியை அறிமுகம் செய்யமுடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இலங்கைத் தமிழ் பேசத் தெரிந்த, நடிக்கும் திறன் கொண்ட யாழ்பாணப் பெண்கள் நாயகியாக வாய்ப்புள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் oli@numtamil.com என்ற மின்னசஞ்லுக்கு தங்கள் புகைப்படத்தையும்பயோ-டேட்டாவையும் அனுப்பலாம்.

தபால் மூலம் அனுப்ப நினைப்பவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.

"INBATHTHAMIL OLI"
P.O. BOX 1224
BURWOOD, NSW 1805
AUSTRALIA

ஏற்கனவே தெனாலியில் இலங்கைத் தமிழ் பேசி அட்டகாசம் செய்தார் கமல். இப்போது யாழ்பாணத்தின் அழகிய, தூய, கொஞ்சு தமிழ்பேசும் நடிகையைத் தேடுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil