"கிசு கிசு" கார்னர்
கவுசல்யாவும் காதல் வலையில் விழுந்து விட்டார். இதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு.
சொல்லாமலே, பூவேலி, நேருக்குநேர், பிரியமுடன் ஆகிய தமிழ்ப்படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர்கவுசல்யா. இவருக்கும், டைரக்டர் சிவாவுக்கும் காதல் என்று பேசப்படுகிறது.
சிவா ஏற்கனவே திருமணமானவர். 2 குழந்தைகளும் உள்ளனர். சினிமா நடிகைகள் திருமணமானவரைக்காதலிப்பது புதிதல்ல. அந்த லிஸ்டில் கவுசல்யாவின் பெயரும் அடிபடுகிறது.
காலமெல்லாம் காதல் வாழ்க என்று கூறிய கவுசல்யா இதற்கு என்ன பதில் சொல்கிறார்? நான்சிவாக்கும், அவரது மனைவிக்கும் நல்ல தோழி. ஏற்கனவே திருமணமான சிவாவை திருமணம் செய்து கொள்வதுஎன்பது சாத்தியமில்லாத ஒன்று என்று மறுக்கிறார்.
புகைய ஆரம்பித்து விட்டது, பற்றிக் கொள்ளுமா, பஸ்பமாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
Comments


Click it and Unblock the Notifications