ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா: சூப்பர் ஸ்டாரை இயக்கும் பிரபுதேவா

By Siva

Recommended Video

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் தபாங் 3

மும்பை: பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் தபாங் 3 படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தபாங், தபாங் 2 படங்கள் ஹிட்டானதை அடுத்து அதன் 3ம் பாகத்தை எடுக்கிறார்கள். சல்மான் ஹீரோவாக நடிக்கும் தபாங் 3 படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இந்த படத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு இன்று இந்தூரில் துவங்கியுள்ளது.

பிரபுதேவா

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை சல்மான் கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதே புகைப்படத்தை பிரபுதேவாவும் வெளியிட்டுள்ளார்.
10 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடிக்கிறார். முன்னதாக 2009ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வாண்டட் படத்தில் சல்மான் நடித்திருந்தார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

முதல் நாள் படப்பிடிப்பில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தபாங் படம் மூலம் தான் சோனாக்ஷி பாலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபுதேவா இதுவரை இயக்கிய இந்தி படங்களில் தபாங் 3-ஐ சேர்க்காமல் மூன்று படங்களில் சோனாக்ஷி நடித்துள்ளார்.

ஹிட்

ஹிட்

தபாங், தபாங் 2 போன்றே தபாங் 3 படமும் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது. தபாங் படத்தை அபிநவ் கஷ்யப்பும், 2வது பாகத்தை அர்பாஸ் கானும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தபாங் படத்தை தான் சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார்கள்.

வாண்டட்

வாண்டட்

சல்மான் கானின் மார்க்கெட் நிலவரம் மோசமாக இருந்த நேரத்தில் தான் வாண்டட் படம் வெளியானது. அதில் இருந்து அவரின் மார்க்கெட் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. சல்மான் கான், பிரபுதேவா கூட்டணி பாலிவுட்டில் வெற்றிக் கூட்டணி ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X