For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  குட்டி ராதிகாவின் கண்கள் பாதிக்கப்பட்டன "தமயந்தி " ஷூட்டிங் ஸ்பாட்

  |
  Actress kutty Radhika Re-entry to cinema

  சென்னை : "இயற்கை" " மீசை மாதவன்" உட்பட நிறைய தமிழ் படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா கன்னட பட உலகில் முன்னணியில் இருக்கும் இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு தமிழில் "தமயந்தி " என்ற படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

  குட்டி ராதிகாவுடன் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, சூப்பர் ஸ்டார் ரஜினியோட நண்பரான ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  damanthi is one of the movie for kuttyrathika as comeback

  பி.கே.ஹெச்.தாஸ் ஒளிப்பதிவையும், தர்மபுரி சோமு வசனம், பாடல்களையும் , கணேஷ் நாராயண் இசையையும், வினோத்குமார் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

  damanthi is one of the movie for kuttyrathika as comeback

  முன்னனி இயக்குனர்கள் பலரிடம் இயக்குனர் பயிற்சி பெற்ற நவரசன் கதை, திரைக்கதை எழுதி மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தை பற்றி இயக்குனர் நவரசன், " 1980 ஆம் ஆண்டு கதாநாயகியை அழித்து அவரது குடும்பத்தை இருந்த இடம் தெரியாமல் செய்து விடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டு அரண்மனையிலிருந்து எதிர்பாராத விதமாக கதாநாயகியின் ஆவி வெளியே வருகிறது. தன்னையும் குடும்பத்தையும் அழித்தவர்களை தேடி வருகிறது.

  damanthi is one of the movie for kuttyrathika as comeback

  அதன் பிறகு நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் விறுவிறுப்பு. நிறைய பொருட் செலவு செய்து படமாக்கி இருக்கிறேன். ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல் லென்ஸ் பொருத்தி நடிக்க வேண்டும் என்று குட்டி ராதிகாவிடம் கூறினேன். அவரும் சரி என்று கூறி நடித்தார். 3 நிமிடம் 16 வினாடிகள் கண் சிமிட்டாமல் ஒரே டேக்கில் நடித்தார். அதைப் பார்த்து குழுவினர் அனைவரும் கை தட்டி பாராட்டினார்கள். ஆனால் லைட் வெளிச்சத்தின் உஷ்ணத்தில் அவருடைய கண்களில் இருந்த லென்ஸ்சுகள் உருகி விட்டது. உடனடியாக டாக்டரை வரவழைத்து அவரது கண்களுக்கு சிகிச்சை அளித்தோம்.டாக்டர் ஓய்வெடுக்க சொல்லியும் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்த குட்டி ராதிகா வலியையும் பொருட்படுத்தாமல் உடனே நடிக்க வந்து விட்டார்.

  damanthi is one of the movie for kuttyrathika as comeback

  இதனால் குட்டி ராதிகாவின் நடிப்பு மீது வைத்து இருந்த அளவில்லாத பற்று அனைவருக்கும் தெரிந்தது. இந்த படத்துல கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலா இருக்கும். பிரம்மாண்டமான அரண்மனை செட்கள் போட்டு படமாக்கி இருக்கோம். ரீ ரிக்கார்டிங் அசத்தலா பண்ணி இருக்கார் மியூசிக் டைரக்டர் கணேஷ் நாராயண் " என்று கூறினார்.

  damanthi is one of the movie for kuttyrathika as comeback

  தமது லட்சுமி விருஷாத்ரி புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நவரசன் தயாரித்து இயக்கி உள்ள " தமயந்தி " விரைவில் வருகிறது.

  English summary
  many ghost movies are coming 1 by 1 and in that series damayanthi is also very much expected. kutty radhika is very popular in tamil cinema industry for her debut movie iyarkai directed by sp jannathan. after doing many different scripts and after long gap she is again coming back to the field of acting into taml cinema.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X