சூட்டிங் ஸ்பாட்
கோடம்பாக்கத்திலிருந்து கூட்டிக் கொண்டு போன நம்மூர் டான்ஸர்களுடன் மலேசியாவில் அஜித்தும் ஜோதிகாவும் ஆடிய ஆட்டம் அந்நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
அஜித் நடித்து வரும் "ராஜா" படம் மிகவும் விறுவிறுப்புடன் வளர்ந்து வருகிறது. இப்படத்திற்காக சமீபத்தில் மலேசியாவில் ஒரு பாடல் காட்சிபடமாக்கப்பட்டது.
அந்தப் பாடல் காட்சியில் அஜித், ஜோதிகாவுடன் 40 டான்ஸர்கள் ஆடினர். அவர்கள் அத்தனை பேரும் கோடம்பாக்கத்திலிருந்து கூட்டிப்போகப்பட்டவர்கள்.
40 டான்ஸர்களுடன் அஜித்தும் ஜோதிகாவும் ஆடிப் பாடிய காட்சியை மலேசியாவைச் சேர்ந்த ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தார்களாம்.
இதுவரை மலேசியாவில் இத்தனை பேர் வந்து டான்ஸ் ஆடி நடிக்கும் காட்சி எதுவும் எடுக்கப்பட்டதில்லை என்பதே இதற்குக் காரணமாம்.
குண்டு குண்டு வத்தலகுண்டு:
இப்படத்தில் மும்தாஜுக்குப் போட்டியாக கவர்ச்சி காட்டியிருக்கிறாராம் புதிதாக கவர்ச்சிக் களத்தில் இறங்கியிருக்கும் மந்த்ரா.
குண்டு உடம்பைக் கொஞ்சம் போல குறைத்துக் கொண்டுள்ள மந்திரா, அஜித்துடன் சேர்ந்து "குண்டு குண்டு வத்தலகுண்டு..." என்ற பாடலுக்கு ஆட்டம்போட்டிருக்கிறாராம்.
இந்தப் பாட்டுக்குப் பிறகு மும்தாஜ் காணாமலே போய் விடுவார் பாருங்கள் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறாராம் மந்த்ரா.


Click it and Unblock the Notifications











