twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ்பாண்டின் சிரமங்கள் ஜேம்ஸ் பாண்டாக இருப்பது அவ்வளவு ஈசியில்லை என்கிறார் புதிய 007 ஆன இங்கிலாந்து நடிகர் டேனியல்கிரேக். பாண்ட் வேடத்தில், கிரேக் நடிக்கும் முதல் படம் கேஸினோ ராயல். பாண்ட் பட வரிசையில் இது 21வது படம்.கிட்டத்தட்ட 40 வருடங்களாக உலக மக்களை லயிக்க வைத்து வரும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு புதியஉருவம் கொடுக்கவுள்ளார் கிரேக்.கிரேக் நடித்துள்ள கேஸினோ ராயல் நவம்பர் 17ம் தேதி திரைக்கு வருகிறது. 007 ஆக நடித்தது எப்படி இருந்ததுஎன்று கிரேக்கிடம் கேட்டால், புலம்பித் தள்ளுகிறார்.அதை ஏன் கேட்கிறீர்கள். இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் அடிபட்டேன், உதைபட்டேன். கயிற்றில் கட்டிஎண்ணை டேங்கர் லாரியில் தொங்க விட்டார்கள். நானும் மனிதன் தானே என்கிறார்.கேஸினோ ராயலை, டை அனதர் டே படத்தை இயக்கிய மார்ட்டின் கேம்பல் தான் இயக்கியுள்ளார். படத்தில்நடிப்பதற்காக உடலை சீராக வைத்துக் கொள்ள வாரத்திற்கு 5 நாட்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தாராம்.இதற்கும் சேர்த்து தான் ஒப்பந்தம் போட்டார்களாம். உடல் எடை ஏறி விடாமல் தடுக்க டயட்டீசியன்ஸ் மற்றும்உடற்பயிற்சியாளர்களை படத் தயாரிப்பு நிறுவனமே வாடகைக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டதாம்.அவர்கள் சொன்னதைத் தான் சாப்பிட வேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்தில் தான் தூங்கி, எழ வேண்டும்.இவ்வளவு சிரமப்பட்டாலும் கூட பாண்ட் ஆக நடிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது என்றுபுன்னகைக்கிறார் கிரேக்.ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயான் பிளமிங் 1953ம் ஆண்டு எழுதிய நூலை அடிப்படையாகவைத்து கேஸினோ ராயல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.பழைய கதை என்றாலும் கூட, இந்தக் காலத்துக்கேற்ப படத்தில் மாற்றங்களை செய்துள்ளார்களாம். படத்தின்தொடக்க காட்சி கருப்பு வெள்ளையில் வருகிறதாம். படத்தின் கதை இதுதான். உலக அளவில் தீவிரவாதிகளுக்குபண உதவி செய்து வரும் பிரெஞ்சு நாட்டவரான லீ சிப்பிரை ஒடுக்கும் வேலையை பிரிட்டிஷ் உளவுஅமைப்பான எம்ஐ5 பாண்டுக்கு கொடுக்கிறது.இயான் பிளமிங் எழுதிய கதையில், லீ சிப்பிரின் பாத்திரம் சோவியத் யூனியனைச் சேர்ந்தவராக காட்டப்படுகிறது.ஆனால், படத்தில் இது பிரெஞ்சுக்காரராக மாற்றப்பட்டுள்ளது.லீ சிப்பிரை கேஸினோ ராயல், சூதாட்ட கிளப்பில் நேருக்கு நேர் சந்திக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். அப்போது பாண்ட்சூதாட்டத்தில் விளையாடுவதற்கு கதாநாயகி ஈவா கிரீன் (படத்தில் இவரது பெயர் வெஸ்பர் லிண்ட்) பணம்கொடுக்கிறார். கூடவே காதலும் தொடங்குகிறது. அப்படியே, அடிதடி, ஆக்ஷன், காதல், மோதல் என படம் வளருகிறது. 1967ம்ஆண்டிலேயே கேஸினோ ராயல் படம் வெளிவந்து விட்டது. ஆனால் அந்தப் படத்தை காமெடி கலந்த ஆக்ஷன்படமாக எடுத்திருந்தார்கள். ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள காஸினோ ராயல், வித்தியாசப்படுத்திஎடுத்துள்ளனராம்.1962ம் ஆண்டுதான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் (டாக்டர் நோ) வெளியானது. அன்றுமுதல் இதுவரைவெளியான பாண்ட் படங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவில் மட்டும் 3.6 பில்லியன் டாலர் அளவுக்குவசூலாகியுள்ளதாம். கடைசி நான்கு பாண்ட் படங்கள் மட்டும் உலக அளவில் 1.5 பில்லியன் டாலர் பணத்தைசம்பாதித்துள்ளன.புதிய பாண்டான 38 வயது கிரேக், இங்கிலாந்தில் உள்ள தேசிய இளைஞர் நாடக குழுவில் பயிற்சி பெற்றவர்.கில்டு ஹால் இசை மற்றும் நாடக பள்ளியில் பட்டம் பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படங்கள், டிவிநாடகங்களில் அவர் நடித்து வருகிறார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் லேட்டஸ்ட் படமான மியூனிக் படத்திலும் தலைகாட்டியுள்ளார்.2008ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியாகவுள்ள 22வது பாண்ட் படத்திற்கும் கிரேக் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். கேஸினோ ராயல் படத்தில் நடிப்பதற்கு முன்பு முந்தைய பாண்ட் நடிகரான பியர்ஸ்பிராஸ்னனை சந்தித்துப் பேசியுள்ளார் கிரேக். அப்போது தைரியமாக நடி என்று பிராஸ்னன்ஊக்கப்படுத்தினாராம்.

    By Staff
    |

    ஜேம்ஸ் பாண்டாக இருப்பது அவ்வளவு ஈசியில்லை என்கிறார் புதிய 007 ஆன இங்கிலாந்து நடிகர் டேனியல்கிரேக்.

    பாண்ட் வேடத்தில், கிரேக் நடிக்கும் முதல் படம் கேஸினோ ராயல். பாண்ட் பட வரிசையில் இது 21வது படம்.கிட்டத்தட்ட 40 வருடங்களாக உலக மக்களை லயிக்க வைத்து வரும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு புதியஉருவம் கொடுக்கவுள்ளார் கிரேக்.

    கிரேக் நடித்துள்ள கேஸினோ ராயல் நவம்பர் 17ம் தேதி திரைக்கு வருகிறது. 007 ஆக நடித்தது எப்படி இருந்ததுஎன்று கிரேக்கிடம் கேட்டால், புலம்பித் தள்ளுகிறார்.

    அதை ஏன் கேட்கிறீர்கள். இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் அடிபட்டேன், உதைபட்டேன். கயிற்றில் கட்டிஎண்ணை டேங்கர் லாரியில் தொங்க விட்டார்கள். நானும் மனிதன் தானே என்கிறார்.

    கேஸினோ ராயலை, டை அனதர் டே படத்தை இயக்கிய மார்ட்டின் கேம்பல் தான் இயக்கியுள்ளார். படத்தில்நடிப்பதற்காக உடலை சீராக வைத்துக் கொள்ள வாரத்திற்கு 5 நாட்கள் கடுமையான உடற்பயிற்சி செய்தாராம்.இதற்கும் சேர்த்து தான் ஒப்பந்தம் போட்டார்களாம். உடல் எடை ஏறி விடாமல் தடுக்க டயட்டீசியன்ஸ் மற்றும்உடற்பயிற்சியாளர்களை படத் தயாரிப்பு நிறுவனமே வாடகைக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டதாம்.

    அவர்கள் சொன்னதைத் தான் சாப்பிட வேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்தில் தான் தூங்கி, எழ வேண்டும்.

    இவ்வளவு சிரமப்பட்டாலும் கூட பாண்ட் ஆக நடிப்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது என்றுபுன்னகைக்கிறார் கிரேக்.ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயான் பிளமிங் 1953ம் ஆண்டு எழுதிய நூலை அடிப்படையாகவைத்து கேஸினோ ராயல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    பழைய கதை என்றாலும் கூட, இந்தக் காலத்துக்கேற்ப படத்தில் மாற்றங்களை செய்துள்ளார்களாம். படத்தின்தொடக்க காட்சி கருப்பு வெள்ளையில் வருகிறதாம். படத்தின் கதை இதுதான். உலக அளவில் தீவிரவாதிகளுக்குபண உதவி செய்து வரும் பிரெஞ்சு நாட்டவரான லீ சிப்பிரை ஒடுக்கும் வேலையை பிரிட்டிஷ் உளவுஅமைப்பான எம்ஐ5 பாண்டுக்கு கொடுக்கிறது.

    இயான் பிளமிங் எழுதிய கதையில், லீ சிப்பிரின் பாத்திரம் சோவியத் யூனியனைச் சேர்ந்தவராக காட்டப்படுகிறது.ஆனால், படத்தில் இது பிரெஞ்சுக்காரராக மாற்றப்பட்டுள்ளது.

    லீ சிப்பிரை கேஸினோ ராயல், சூதாட்ட கிளப்பில் நேருக்கு நேர் சந்திக்கிறார் ஜேம்ஸ் பாண்ட். அப்போது பாண்ட்சூதாட்டத்தில் விளையாடுவதற்கு கதாநாயகி ஈவா கிரீன் (படத்தில் இவரது பெயர் வெஸ்பர் லிண்ட்) பணம்கொடுக்கிறார்.

    கூடவே காதலும் தொடங்குகிறது. அப்படியே, அடிதடி, ஆக்ஷன், காதல், மோதல் என படம் வளருகிறது. 1967ம்ஆண்டிலேயே கேஸினோ ராயல் படம் வெளிவந்து விட்டது. ஆனால் அந்தப் படத்தை காமெடி கலந்த ஆக்ஷன்படமாக எடுத்திருந்தார்கள். ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள காஸினோ ராயல், வித்தியாசப்படுத்திஎடுத்துள்ளனராம்.

    1962ம் ஆண்டுதான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் (டாக்டர் நோ) வெளியானது. அன்றுமுதல் இதுவரைவெளியான பாண்ட் படங்கள் மூலம் அமெரிக்கா, கனடாவில் மட்டும் 3.6 பில்லியன் டாலர் அளவுக்குவசூலாகியுள்ளதாம். கடைசி நான்கு பாண்ட் படங்கள் மட்டும் உலக அளவில் 1.5 பில்லியன் டாலர் பணத்தைசம்பாதித்துள்ளன.

    புதிய பாண்டான 38 வயது கிரேக், இங்கிலாந்தில் உள்ள தேசிய இளைஞர் நாடக குழுவில் பயிற்சி பெற்றவர்.கில்டு ஹால் இசை மற்றும் நாடக பள்ளியில் பட்டம் பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளாக திரைப்படங்கள், டிவிநாடகங்களில் அவர் நடித்து வருகிறார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் லேட்டஸ்ட் படமான மியூனிக் படத்திலும் தலைகாட்டியுள்ளார்.

    2008ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியாகவுள்ள 22வது பாண்ட் படத்திற்கும் கிரேக் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார். கேஸினோ ராயல் படத்தில் நடிப்பதற்கு முன்பு முந்தைய பாண்ட் நடிகரான பியர்ஸ்பிராஸ்னனை சந்தித்துப் பேசியுள்ளார் கிரேக். அப்போது தைரியமாக நடி என்று பிராஸ்னன்ஊக்கப்படுத்தினாராம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X