#dharbar - தொடர்ந்து வெளியாகும் ரஜினி, நயன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்... கியாரே செட்டிங்கா?
தர்பார் பட ஸ்டில்கள் படக்குழுவினராலே இணையத்தில் லீக்காகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: தர்பார் படத்தின் படப்பிடிப்பு போட்டோக்கள் தினந்தோறும் லீக்காவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஹீரோயினான நயன்தாரா இரு தினங்களுக்கு முன்பிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்பிருந்தே, அப்படத்தின் போட்டோக்கள் லீக்காகி வருகிறது. போஸ்டருக்காக நடத்தப்பட்ட புகைப்படப் படப்பிடிப்பு போட்டோக்கள் முதலில் லீக்கானது.

லீக்கான போட்டோக்கள்:
அதன் பிறகு மும்பையில் நடக்கும் படப்பிடிப்பு போட்டோக்கள் லீக்கானது. இதில் ரஜினி சம்மந்தப்பட்ட போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் நேற்று நயன்தாரா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் லீக்கானது. அதில் ரஜினி கிரிக்கெட் விளையாடுவது போல் இருந்தது.

கியாரே செட்டிங்கா?
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காவதை பார்க்கும் போது, படக்குழுவே இதனை வேண்டுமென்றே லீக் செய்கின்றனரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் என்னவென்றால், பொதுவாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் படப்பிடிப்பு தளங்களுக்கு முன்னனுமதி இல்லாமல் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

இப்படியும் புரோமோஷன்:
இதனால் தர்பார் படத்தின் படப்பிடிப்பு போட்டோக்களை வெளியாட்கள் யாரும் வெளியிட வாய்ப்பில்லை. எனவே தர்பார் படக்குழுவே தான் திட்டமிட்டு இந்த வேலையை செய்வதாக பேசப்படுகிறது. படத்தின் புரோமோஷனாக இது இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்களாம்.

ரஜினி படத்துக்குமா?
நாள்தோறும் ஏதாவது ஒரு புகைப்படமோ, வீடியோவோ வாட்ஸ்அப்பில் வெளியாகும் பட்சத்தில், பாதிப்படத்தை வாட்ஸ்அப்பிலேயே பார்த்துவிடலாம் என சிலர் கேலி செய்கின்றனர். ரஜினி படத்துக்கு பப்ளிசிட்டியே தேவையில்லாத பட்சத்தில், படக்குழுவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என ரசிகர்கள் புலம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











