»   »  சினிமாவில் நடித்த தேவாரம் !

சினிமாவில் நடித்த தேவாரம் !

Subscribe to Oneindia Tamil

தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற வால்டேர் தேவாரம், சத்யராஜ் நடிக்கும் இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் ஒரு காட்சியில்நடித்துள்ளார்.

வீரப்பனைப் பிடிக்காமல் ஓய மாட்டேன் என்று படு தீவிரமாக இருந்தவர் தேவாரம். வீரப்பனுக்கும், தேவாரம் பெயரைக்கேட்டாலே கடும் கோபம் வரும். அந்த அளவுக்கு வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தேவாரம்.

படு ஸ்ட்ரிக்டான அதிகாரியான தேவாரம் கடைசியில் வீரப்பனைப் பிடிக்க முடியாமலேயே ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னும்கூட அவரை ஜெயலலிதா, வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தினார். இருப்பினும் அந்த பாக்கியம், தேவாரத்தின் சிஷ்யர்விஜயக்குமாருக்குத்தான் கிடைத்தது.

இப்போது ஓய்வு வாழ்க்கையை மேற்கொண்டு வரும் தேவாரம், பயங்கரமான விளையாட்டுப் பிரியர். பல்வேறு விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இங்கிலீஷ்காரன் படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதாவது நாயகியான நமீதா, ஓட்டப் பந்தய வீராங்கனை.மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெறுகிறார். பரிசளிப்பு விழாவில் முக்கியப்பிரமுகரிடமிருந்து அவர் பரிசைப் பெறுகிறார்.

பரிசைத் தரும் முக்கியப் பிரமுகராக யாராவது நிஜமான முக்கியப் பிரமுகரையே நடிக்க வைத்தால் என்ன என்று இயக்குநர் ஷக்திசிதம்பரம் யோசித்துள்ளார்.அப்போது தேவாரத்தின் பெயரை சத்யராஜ் பரிந்துரைத்துள்ளார். நல்ல ஐடியா என்று கூறி ஷக்திசிதம்பரமும், தயாரிப்பாளர் அமுதா துரைராஜும் தேவாரத்தை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டனர்.

முதலில் தேவாரம் தயங்கியுள்ளார். பின்னர் படத்தின் கதையைக் கூறி அவரது சம்மதத்தைப் பெற்றனர். பின்னர் தேவாரமே, புனிதஜோசப் கல்லூரி மைதானத்தில் இக்காட்சியை எடுக்கலாம் என்று கூறி அவரே அனுமதியையும் வாங்கித் தந்தாராம்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது தேவராம் பெர்பக்டாக நடித்தார் என்று ஷக்தி சிதம்பரம் கூறினார். காட்சிபடமாக்கப்பட்டபோது உடன் இருந்த, வால்டேர் வெற்றிவேல் சத்யராஜை, ஒரிஜினல் வால்டேர் தேவாரம் பாராட்டினாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil