சூட்டிங் ஸ்பாட்

By Staff

நடிகை பிரியாராமன் தயாரிக்கும்முதல் படத்தின் ஹீரோயினாக அவரைப் போலவே சொந்தப் படம் எடுத்து அனுபவப்பட்ட தேவயானி நடிக்கிறார்.

காதல் கணவர் ராஜகுமாரனை ஒப்பேற்ற கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை செலவு செய்து (அதில் பெரும்பங்கு கடன் வாங்கி)காதலுடன் என்ற படத்தைத் தயாரித்தார் தேவயானி. படம் மிகச் சுமாராக ஓடிக் கொண்டுள்ளது. போட்ட முதல்தேறுவதே கஷ்டம் என்கிறார்கள்.

இந் நிலையில் தேவயானியைப் போலவே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகை பிரியாராமனும் தனதுகணவருக்காக ஒரு படம் எடுக்கிறார். அதில் அவரது கணவர் நடிகர் ரஞ்சித்தான் ஹீரோ.

அவருக்கு ஜோடியாக யாரைப் போடலாம் என்று பிரியாவும், ரஞ்சித்தும் தீர யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்ராசி கருதி தேவயானியையே போடலாம் என்றுமுடிவு செய்துள்ளனர்.

தேவயானியை அணுகி அட்வான்சும் கொடுத்துவிட்டனர். காதலுடன் படம் கொடுத்த ஷாக் காரணமாகவடிவேலுவுடன் கூட ஜோடி சேரத் தயாராக இருந்த தேவயானி ரஞ்சித்துடன் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.

படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. படப்பிடிப்பின்போது காசை எப்படி மிச்சம் பண்ணுவது என்பது குறித்து தனதுஅனுபவத்தை வைத்து அவ்வப்போது பிரியாராமனுக்கு டிப்சும் வழங்கி வருகிறாராம் தேவயானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X