படப்பிடிப்பில் நடிகைக்கு 'பஞ்ச்' விட்டு கண்ணை கோவைப்பழமாக்கிய தனுஷ்
சென்னை: அனேகன் படத்தில் நடிக்கையில் தனுஷ் தற்செயலாக தனது முகத்தில் குத்துவிட்டதாக நடிகை அமிரா தஸ்துர் தெரிவித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் படம் மூலம் கோலிவுட் வருபவர் நடிகை அமிரா தஸ்துர். அண்மையில் சென்னை வந்து தனது காட்சிகளை நடித்துக் கொடுத்தார் அமிரா.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இஷாக்
ராஞ்ஹனா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடந்த வேளையில் எனது இந்தி படமான இஷாக்கை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் ஆனந்த் சார் என்னை பார்த்துவிட்டு அனேகன் படத்தில் நடிக்க அழைத்தார்.

அனேகன்
எனது முதல் படம் ரிலீஸாகும் முன்பே எனக்கு அடுத்த வாய்ப்பை ஆனந்த் சார் அளித்தது வியப்பாக இருந்தது. எனக்கு அனேகனின் கதை பிடித்திருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன்.

தமிழ்
நான் பாதி மராத்தி, பாதி பார்சி பெண். அதனால் தமிழ் எனக்கு சுத்தமாக தெரியாது. அப்படி இருக்கையில் தமிழில் எப்படி நடப்பது என்று கவலைப்பட்டேன். ஆனந்த் சார் எனக்கு வசனங்கள் பேச உதவி செய்தார்.

கெட்ட வார்த்தை
என்னுடைய பாலிவுட் படப்பிடிப்பில் பல உதவி இயக்குனர்கள் தமிழில் பேசுவார்கள். அவர்களுடன் நான் தமிழில் பேசினேன். அவர்கள் எனக்கு கெட்ட வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார்கள். நானும் அதை எளிதில் கற்றுக் கொண்டேன்.

சண்டை காட்சிகள்
படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நானே நடித்துள்ளேன். தனுஷ் மிகவும் கூலான நடிகர்.

குத்து
ஒரு காட்சியை படமாக்கும்போது நான் தனுஷின் பின்னால் நின்று கொண்டிருந்தேன். அவர் கையை தூக்கி பின்புறமாக கொண்டு வர அது தெரியாமல் என் முகத்தில் குத்தாக விழுந்தது. அதில் என் கண்கள் சிவந்துவிட்டன.

தனுஷ்
எனக்கு குத்து விழுந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகவிட்டனர். தனுஷ் தனது செயலுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றார் அமிர்யா.


Click it and Unblock the Notifications











