நடுரோட்டில் ஆடிப் பாடிய தனுஷ், நித்தியா மேனன்... வைரலாகும் செம டூயட் வீடியோ

புதுச்சேரி : தனுஷ் நடிக்கும் டி 44 படத்திற்கு திருச்சிற்றம்பலம் என டைட்டில் வைக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ராஷி கன்னா, நித்தியா மேனன், பிரியா பவானி சங்கர் என மூன்று ஹீரோயின்கள் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

dhanush, nithiya menon dancing in puducherry streets videos goes viral

மூன்று கால கட்டங்களில் நடப்பதாக எடுக்கப்படும் இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கப்பட்டது. முதல் கட்ட ஷுட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷி கன்னா நடித்து வந்தனர். இந்த ஷுட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி வைரலாகின. தற்போது அடுத்த கட்டமாக புதுச்சேரியில் மும்முரமாக ஷுட்டிங் நடந்து வருகிறது.

தனுஷ், ராஷி கன்னா நடிக்கும் காட்சிகள் பிரெஞ்சு ஸ்டைலில் அமைந்த காஃபி ஷாப்பில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து லேட்டஸ்டாக தனுஷ், நித்தியா மேனன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இவர்கள் புதுச்சேரியில் நடுரோட்டில் ஆடிப் பாடிய வீடியோ மற்றும் ஃபோட்டோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு தான் தனுஷும், நித்தியா மேனன் அதே ஸ்டெப் போட்டு ஆடி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள ஒயிட் டவுன் பகுதியில் தான் திருச்சிற்றம்பலம் படத்தின் இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், அனிருத் காம்போ இந்த படத்தில் இணைந்துள்ளது. டைரக்டர் மித்ரன் ஜவஹருடன் தனுஷ் இணையும் நான்காவது படம் இது.

ஒரு இளைஞரின் வாழ்க்கையில் மூன்று கால கட்டங்களில் சந்திக்கும் காதலை மையமாக கொண்டது தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது. இதில் கல்லூரி கால காதலியாக தான் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதால், கேரக்டருக்க பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளார் நித்தியா மேனன்.

ஒல்லியான தோற்றத்தில் தனுஷுக்கு சரிசமமாக நடனமாடும் நித்தியாமேனன் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை தனுஷின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து, வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X