ப்பா.. ஒரு கிராமத்தையே செட் போட்டு உருவாக்கிட்டாங்களே.. வைரலாகும் ‘கர்ணன்’ மேக்கிங் வீடியோ!
சென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'கர்ணன்' மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தனுஷின் பிறந்த நாளை நேற்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்தனர்.
ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட 'ரகிட ரகிட ரகிட' பாடல் யூடியூப் டாப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

கர்ணன் டைட்டில் லுக்
நடிகர் தனுஷுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கலைப்புலி எஸ். தாணு, கர்ணன் டைட்டில் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ தனுஷ் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் என அறிவித்து இருந்தார். நேற்று காலை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் அட்டகாசமான டைட்டில் லுக்கை வெளியிட்டார்.
மேக்கிங் வீடியோ
கர்ணன் படத்தின் டைட்டில் லுக்கை தொடர்ந்து அட்டகாசமான மேக்கிங் வீடியோ கலைப்புலி எஸ். தாணுவின் அதிகாரப்பூர்வமான யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

கிராமமே செட்
கர்ணன் படமும் பீரியட் படமாக உருவாகி வருவதால், ஒரு குக் கிராமத்தையே செட் போட்டு, படமாக்கி உள்ளனர். மேக்கிங் வீடியோவில், மாடல் செட்டில் இருந்து, அது ரியலாக ஆர்ட் டிபார்ட்மென்ட் உதவியால் உருவாக்கப்பட்டதையும் மாரி செல்வராஜின் மாஸ் டைரக்ஷனையும் பரவலாக காட்டி உள்ளனர்.

வாளுடன் தனுஷ்
மேக்கிங் வீடியோவின் இறுதியில், ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்திருந்த நடிகர் தனுஷின் காட்சியும் இடம்பெற்று தனுஷ் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் உணர்வை கொடுத்தது. கையில் வாளுடன் லுங்கியைக் கட்டிக் கொண்டு, பாறை ஒன்றின் மீது ஏறி நிற்கும் தனுஷை பார்த்த ரசிகர்கள், கர்ணன் படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக வெயிட் செய்து வருகிறோம் என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

ராஜமேளம்
"நாதஸ்வர சக்கரவர்த்தி"திரு. மருங்கன் அய்யாவின் கம்பீரமான இராஜ மேளத்தோடு இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் மந்திர நரம்புகளை மீட்ட, உருவான கர்ணனின் தொடக்கமும் வருகையும்" என மேக்கிங் வீடியோ முழுவதும் ரசிகர்களை துள்ள வைத்த ராஜமேளம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











