»   »  குத்தாட்டத்தால் வந்த கல்தா!

குத்தாட்டத்தால் வந்த கல்தா!

Subscribe to Oneindia Tamil

திருமகன் படத்தை இயக்கி வந்த ரத்னகுமார் அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார். மிச்சசொச்சப் படத்தையும் எஸ்.ஜே.சூர்யாவே இயக்கி வருகிறாராம்.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ரத்னகுமார் இயக்கும் படம் திருமகன். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்துவருகிறார். தேவா இசையமைக்கிறார். முழுக்க முழுக்க தேனிப்பக்கமே படத்தை எடுத்து வந்தனர்.

இப்படத்தில் நடிக்க முதலில் சூர்யாவுக்கே ஜோடியே கிடைக்கவில்லை. வம்பாடுபட்டு மீரா ஜாஸ்மினை பிடித்துவந்தனர். இவர் தவிர மாளவிகாவும் படத்தில் இருக்கிறார். அவர் போதாதென்று ப்ரீத்தி வர்மாவையும் கூட்டிவந்து கிளாமர் பக்கம் வெயிட்டாக்கி இருக்கிறார்கள்.

படம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நிலையில் தாணுவுக்கும், ரத்னகுமாருக்கும் முட்டிக் கொண்டு விட்டதாம்.பட்ஜெட்டை மீறி செலவு செய்கிறார், தன்னிடம் சொல்லாமல் முக்கிய முடிவுகளை எடுக்கிறார் என்பது தாணுவின்குற்றச்சாட்டு.

தனது சுதந்திரத்தைப் பறிப்பது போல கணக்கு வழக்கைக் கேட்டு டார்ச்சர் செய்கிறார் என்பது ரத்னகுமாரின் புகார்பட்டியல்.

ஆனால் பிரச்சினையே வேறு என்கிறார்கள். படத்தில் சூர்யாவின் வலியுறுத்தலைத் தொடர்ந்து நிறையப் பாடல்காட்சிகளை வைத்துள்ளார் ரத்னகுமார். மாளவிகாவையும், ப்ரீத்தி வர்மாவையும் வைத்து திகட்டத் திகட்டகிளாமர் பாடல்களை எடுத்து முடித்த ரத்னகுமார், தனது சாய்ஸுக்கேற்ப ஒரு குத்துப் பாட்டை வைத்துள்ளார்.

அதில் கார்த்திகா என்ற துணை நடிகையை ஆட வைத்துள்ளார். கார்த்திகாவின் நெளிவு, சுளிவுகள் பிடித்துப்போகவே அவரை வைத்து புதுசாக ஒரு குத்துப் பாட்டைச் சேர்த்தாராம் ரத்னகுமார்.

ஆனால் இது கலைப்புலிக்குப் பிடிக்கவில்லையாம். இதுகுறித்து அவர் ரத்னகுமாரிடம் கேட்கப் போக கடுப்பாகிவிட்டார் ரத்னகுமார். படத்தை பாதியில் விட்டு விட்டு சென்னைக்குப் பறந்து விட்டார்.

கலைப்புலி மீது மட்டுமே ஆரம்பத்தில் குற்றம் சாட்டி வந்த ரத்னகுமார் இப்போது சூர்யாவையும் சரமாரியாக சாடிவருகிறார். இதையடுத்து கட்டப் பஞ்சாயத்து நடந்துள்ளது.

அதில் ரத்னகுமா>ன் சம்பளத்தை அப்படியே கொடுத்து விடுவது, அவர் படத்திலிருந்து விலகிக் கொள்வது, மிச்சப்படத்தை சூர்யாவே இயக்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் படத்தின் டைட்டிலில்இயக்கம் ரத்னகுமார் என்றுதான் வருமாம்.

ரத்னகுமார் வெளியேறி விட்டதால் மிச்ச சொச்ச படத்தையும் இப்போது சூர்யாவே இயக்கி வருகிறாராம்.

ஏற்கனவே மீரா ஜாஸ்மினுக்கும், சூர்யாவுக்கும் காதல், கல்யாணம் என கிசுகிசுக்கள் கொடி கட்டிப் பறக்கின்றன.இந்த நிலையில் இயக்குநரால் திருமகன் இன்னொரு சலசலப்பை சந்தித்துள்ளார்.

சூர்யாவின் கைக்கு இயக்கும் பொறுப்பு மாறியுள்ளதால் படத்தில் கசமுசா காட்சிகளை நிறைய சேர்க்கக் கூடும்என்கிறார்கள்.

ஆஹாஹா!

Read more about: tirumagan director replaced
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil