twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெப்சீரிஸில் 12 பாகமாக உருவாகிறது சந்தனமர வீரப்பன் கதை.. கிஷோர் நடிப்பில் தொடங்கியது ஷூட்டிங்!

    By
    |

    சென்னை: வெப் சீரிஸில் உருவாகும் சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதையின் ஷூட்டிங், பெங்களூரில் தொடங்கியுள்ளது.

    Recommended Video

    சிம்பு Sister Anjali Rao Blessed with Baby Boy | Ramesh Tilak

    தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் மிரட்டி வந்தவர், சந்தனமரக் கடத்தல் மன்னன் என அழைக்கப்பட்ட வீரப்பன்.

    சத்தியமங்கலம் காட்டை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்தி வந்தார்.

    3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ!3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ!

    சுட்டுக் கொல்லப்பட்டார்

    சுட்டுக் கொல்லப்பட்டார்

    தமிழக, கர்நாடக, கேரள அரசுகளுக்குப் பெரும் சவாலாக விளங்கிய வீரப்பன், வனத்துறையினர், போலீஸ் அதிகாரிகள் உட்பட 184 பேரை கொன்றதற்காகவும் சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளைக் கொன்று தந்தத்தைத் திருடியதற்காகவும் தேடப்பட்டு வந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 18 ஆம் தேதி, விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ராம் கோபால் வர்மா

    ராம் கோபால் வர்மா

    இவரது வாழ்க்கை கதையை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா படமாக இயக்கினார். கன்னடத்தில் உருவான இந்தப் படத்துக்கு கில்லிங் வீரப்பன் என்ற டைட்டில் வைத்திருந்தனர். பின்னர் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. சிவராஜ்குமார், சந்தீப் பரத்வாஜ். பாருல் யாதவ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சில விருதுகளையும் பெற்றது.

    வீரப்பனாக கிஷோர்

    வீரப்பனாக கிஷோர்

    இதையடுத்து, வீரப்பனின் வாழ்க்கை கதையை வன யுத்தம் என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் உருவாக்கினார் ஏ.எம்.ஆர் ரமேஷ். இவர் குப்பி, காவலர் குடியிருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் கிஷோர் வீரப்பனாக நடித்திருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அஜயன் பாலா வசனம் எழுதி இருந்தார்.

    வெப் சீரிஸ்

    வெப் சீரிஸ்

    இந்நிலையில், லாக்டவுன் காரணமாக பெரும்பாலான இயக்குனர்கள் வெப் சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கின்றனர. இதனால், வீரப்பன் கதையும் வெப் சீரிஸ் ஆகிறது. இதை வனயுத்தம் படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். பூபதி கார்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். சுனில் ஷெட்டி உள்படபலர் நடிக்க உள்ளனர். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 12 எபிசோடாக உருவாகிறது. இதன் ஷூட்டிங் கர்நாடகாவில் தொடங்கி உள்ளது.

    English summary
    Director AMR Ramesh has announced somdays before about Veerappan web series. He has now started the shooting in Karnataka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X