ஒத்துழைக்க மறுப்பு: அனன்யா மீது இயக்குநர் புகார்!

By Shankar

Ananya
நாடோடிகள் நாயகி அனன்யா, சீடன் படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என அப்படத்தின் இயக்குநர் சுப்பிரமணிய சிவா புகார் கூறினார்.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. இவர் தனுஷ் ஜோடியாக நடித்த சீடன் படம் இன்று ரிலீசானது. இதன் படப்பிடிப்பில் அனன்யா ஒத்துழைப்பு அளிக்காமல் தொல்லை கொடுத்ததாக படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "சீடன் படம் சிறப்பாக வந்துள்ளது. தணிக்கை குழுவினரே படத்தைப் பாராட்டினர். படத்தின் நாயகி அனன்யா நன்றாகத்தான் நடித்தார். ஆனால் மேக்கப் போடும் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கதைப்படி அனன்யாவுக்கு வீட்டில் வேலை பார்க்கும் பெண் வேடம். எனவே முகம் பளிச்சென்று இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன். அவர் கேட்கவில்லை. நிறைய மேக்கப் போட்டுக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார்.

முகத்தை எப்போதும் கொஞ்சம் சோகமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதையும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே எங்களுக்குள் சண்டை சச்சரவாகவே இருந்தது.

ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தை அனன்யா பார்த்தார். அவர் நடிப்பு பிரமாதமாக வந்திருந்தது. படப்பிடிப்பில் தகராறு செய்ததற்காக இப்போது என்னிடம் மன்னிப்பு கேட்கிறார். நானும் மறந்து மன்னித்தேன்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X