சாமியாட்டம் கன்ஃபார்ம்.. சியான் 60 ஷூட்டிங் ஓவர்.. சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட இயக்குநர்!

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் சியான் 60 படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் போட்டு அறிவித்துள்ளார்.

கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் மற்றும் சியான் 60 என நடிகர் விக்ரம் நடிப்பில் 4 படங்கள் ரெடியாகி வருகின்றன.

எந்த படம் முதலில் வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இரண்டாவது படம்

இரண்டாவது படம்

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ள நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரமுக்கு இது இரண்டாவது படம். தந்தை சியான் விக்ரம் உடன் அதற்குள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார் த்ருவ் விக்ரம்.

கேங்ஸ்டர்

கேங்ஸ்டர்

சியான் 60 படமும் கேங்ஸ்டர் கதை தான். அந்த படத்திற்கு டைட்டிலே கேங்ஸ்டர் என வைக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை எனக் கூறப்படுகிறது. முதலில் கார்த்திக் சுப்புராஜ் விக்கிபீடியாவில் அடுத்த படத்தின் தலைப்பு இரும்பு கை மாயாவி என இருந்தது. ஆனால், அது அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், என்ன டைட்டில் வைக்கப் போகிறார் கார்த்திக் சுப்புராஜ் என அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

டார்ஜிலிங்

டார்ஜிலிங்

சியான் 60 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் டார்ஜிலிங் மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்தின் ஷூட்டிங்கும் டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் முடிந்தது

ஷூட்டிங் முடிந்தது

சியான் 60 படத்தின் ஷூட்டிங் இப்போ தான் ஆரம்பம் ஆனது போல இருந்தது. ஆனால், கிடுகிடுவென அந்த படத்தின் ஷூட்டிங்கை வெற்றிகரமாக இந்த கொரோனா காலக் கட்டத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அவுட் ஆஃப் ஃபோகஸ்

அவுட் ஆஃப் ஃபோகஸ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்தது என்கிற அறிவிப்பை சியான் விக்ரமின் போட்டோவை போட்டு அறிவித்துள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் சியான் விக்ரம் அவுட் ஆஃப் போகஸில் உள்ளார். ஆனாலும், ரசிகர்கள் ஃபோகஸ் ஃபுல்லா சியான் விக்ரம் மேல் தான் என கமெண்ட்டுகள் பறந்து வருகின்றன.

சாமியாட்டம்

சாமியாட்டம்

இன்னொரு புறம் மொபைலில் சியான் 60 படத்தின் பாடல் காட்சியின் ஸ்டில் ஒன்றும் இருக்கிறது. அதை பார்த்தால் ஆறுச்சாமியாக திருநெல்வேலி அல்வாடா என சியான் விக்ரம் போட்ட ஆட்டம் தான் ஞாபகம் வருவதாகவும் அதே போல ஒரு சாமியாட்டம் இந்த படத்திலும் கன்ஃபார்மா இருக்கும் என விக்ரம் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் எப்போ

ஃபர்ஸ்ட் லுக் எப்போ

சுதந்திர தினமான இன்று சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அப்படியே தட்டி விடுங்க கார்த்திக் சுப்புராஜ் அண்ணா என சியான் விக்ரம் ரசிகர்கள் கோரிக்கை ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். டைட்டில் செமயா இருக்கணும் அண்ணா என்றும் கோரிக்கைகள் பறக்கின்றன.

ஜகமே தந்திரம் மாதிரி இருக்கக் கூடாது

ஜகமே தந்திரம் மாதிரி இருக்கக் கூடாது

ஜிகர்தண்டா ரேஞ்சுக்கு படம் இருக்கணும் அண்ணா போன படம் ஜகமே தந்திரம் மாதிரி தயவு செஞ்சு எடுத்து வச்சிடாதீங்க.. சியான் விக்ரமுக்கும் உங்களுக்கும் நிச்சயம் இந்த படம் பெரிய கம்பேக்கா இருக்கணும் எனவும் ரசிகர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

ஆதித்த கரிகாலன்

ஆதித்த கரிகாலன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்திற்காக விக்ரம் எடுத்துக் கொண்ட வாள் பயிற்சி வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

துருவ நட்சத்திரம்

துருவ நட்சத்திரம்

நடிகர் சூர்யா வேண்டாம் என ஒதுக்கிய துருவ நட்சத்திரம் கதையை ஓகே சொல்லி நடிகர் விக்ரம் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியான நிலையில், இன்னமும் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. அந்த படமும் சீக்கிரம் ரெடியாகி வெளியாக வேண்டும் என்பது சியான் ரசிகர்களின் விருப்பம்.

லேட்டாகும் கோப்ரா

லேட்டாகும் கோப்ரா

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பும் இன்னமும் முடியவில்லை. அதற்கு பின்னர் தொடங்கிய சியான் 60 படத்தின் ஷூட்டிங்கே முடிந்து விட்டது. வெகு விரைவாக கோப்ரா ஷூட்டிங்கும் முடிந்து படம் ரிலீசாக வேண்டும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X