பொன்னியின் செல்வன் அப்டேட்… வந்தியத்தேவன்,குந்தவை நர்மதா நதிக்கரையில் காதல்... வெளியானது புகைப்படம்!
சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நர்மதா நதிக்கரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன்
அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினத்தை படிக்கும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்தோன்றி மறையும். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்... என அந்த காட்சியையும் அந்த வீர நாராயண ஏரியின் காட்சியை முன் தோன்ற வைத்து உள்ளத்தை வசீகரிக்கும் இதுதான் இந்த புதினத்தின் சிறப்பு.

மணிரத்னத்தின் கனவுபடம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு மணிரத்னத்தின் திரைப்படமாகி வருகிறது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

குவாலியரில்
இப்படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பி மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரம் என அழைக்கப்படும் குவாலியர் நடைபெற்று வருகிறது. குவாலியர் கோட்டை 9 நுற்றாண்டில் நிறுவப்பட்டதாகும். குவாலியர் நகரம் அரண்மனைகள் கோவில்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்குள்ள சாஹூ பகுகா கோவிலில் அரிய வகையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. மேலும், சமண சிலைகளும் , உயரமான கோட்டை சுவர்களும் உள்ளன. அதேபோல ஓர்ச்சா நகரிலும் பல கோயில்களும், அரண்மனைகளும் உள்ளன. வரலாற்றுத்திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இங்கு மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதால் அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நர்மதா நதிக்கரையில்
மத்திய பிரதேசத்தில் நர்மதை நதி பாயும் மகேஸ்வர் நகரில் வந்தியத்தேவன் கார்த்தி மற்றும் குந்தவை த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. நர்மதா நதிக்கரையின் புகைப்படத்தை நடிகை த்ரிஷாவும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதை அடுத்து மணிரத்னம் படப்பிடிப்பு தளத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

ஏராளமான நட்சத்திரங்கள்
இப்படத்தில் சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, ரியாஷ் கான், ஜெயராம், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா, கிஷோர், அஸ்வின், அர்ஜூன் சிதம்பரம், ரஹ்மான், மோகன் ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

12 பாடல்கள்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மொத்தம் 12 பாடல் இருப்பதாகவும், இதில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எட்டு பாடல்களை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களையும், வெண்பல கீதையன் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து ஒரு பாடலையும் எழுதியுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











